நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டி.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி

Published On:

| By Mathi

Mammootty_ Kamal

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:
என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

ADVERTISEMENT

நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது.

என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு.

ADVERTISEMENT

நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share