தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர், எம்பிக்கள் – யார் யார்?

Published On:

| By Kavi

மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பலர் இன்று (ஜூன் 13) தவெகவில் இணைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை இல்லாததால் விசிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

ADVERTISEMENT

இந்தசூழலில் அதிமுக, பாஜக என பிற கட்சிகளை சேர்ந்த பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இன்றும் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்வு பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன் நடைபெற்றது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் கொறடா ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

பாஜகவில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, திருப்பூர் பாஜக மகளிர் அணி நிர்வாகி கே. ஜெகதீஸ்வரி ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.

அதுபோன்று பாஜவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பாண்டி ரவி தவெகவில் இணைந்தார். இவர், விஜய்யின் படங்களான கில்லி, ஜில்லா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

மற்றொரு நடிகரான  டி.எஸ்.ஆர். சீனிவாசனும் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share