தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் ரத்து!

Published On:

| By Kavi

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 2025  நவம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்,  சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கு மாற்றாக தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 உணவுப் படி வழங்கப்படும். 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

92% தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு உணவு வேண்டாம், உணவுப் படி வழங்க வேண்டும் என கேட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share