வங்கிகள் நாளை திறப்பு: பணிக்கு வர முடியாது என அறிவித்த வங்கி அதிகாரிகள்!

Published On:

| By Mathi

Bank Strike-Sunday

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை வங்கிக் கிளைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வரமாட்டோம் என்று வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய யூனியன் வங்கி அதிகாரிகள் ஊழியர் சங்கத்தின் (All India Union Bank Officer Staff Association – AIUBOSA) பொதுச் செயலாளர் டி.எஸ்.கணேசன் இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில், செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிக் கிளைகளைத் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

நாளை பணிக்கு வருமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. எங்களது அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (All India Bank Officers’ Association – AIBOA), செப்டம்பர் 27ஆம் தேதி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அதனால் நாங்கள் நாளை பணிக்குச் செல்ல மாட்டோம்.

அதேநேரத்தில், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வருமாறு நிர்வாகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு வந்தாலோ அல்லது அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டாலோ, உடனடியாக சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share