ரத்த சோகைக்கு தீர்வு.. இரும்புச் சத்தை அதிகரிக்கும் 5 உணவுகள்.. லிஸ்ட் இதோ

Published On:

| By Santhosh Raj Saravanan

five iron rich foods that prevent anemia and boost hemoglobin

ரத்த சோகையை தடுத்து இரும்புச் சத்தை அதிகரிக்கும் (iron rich foods) 5 முக்கிய உணவுகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் இரும்புச்சத்து குறைபாடு மிகவும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. குறிப்பாக இரும்புச் சத்து குறைபாடு  பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு ஹீமோகுளோபின் அளவைக் குறைத்து, ரத்த சோகைக்கு வழிவகுக்கும். ரத்த ஓட்டம் மூலம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை (hemoglobin) உற்பத்தி செய்ய இரும்புச்சத்து உடலுக்கு உதவுகிறது. இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, ​​ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு, உடல் விரைவில் சோர்வடையத் தொடங்குகிறது.

ADVERTISEMENT

இதனால் சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உடல்நலத்தை பாதிக்கக்கூடும். ஆனால், மாத்திரைகள் இன்றி முறையான உணவுமுறையை கடைபிடித்தால் போதும், இரும்புச்சத்து குறைபாட்டைப் (Iron deficiency) பெருமளவில் சரிசெய்ய முடியும். குறிப்பாக கீரை, பீட்ரூட் மற்றும் மாதுளை போன்ற உணவுகள் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க உதவும். இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும் 5 உணவுகள் பட்டியலைப் பார்க்கலாம்.

கீரைகள்

ADVERTISEMENT

கீரைகளில் அதிகமாக இரும்புச் சத்து உள்ளது. அதில் உள்ள இரும்புச் சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. கீரையை (Spinach iron) குழம்பு வைத்தோ, சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொள்ளலாம். எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இதை உட்கொள்வது, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது. முருங்கை கீரை உள்ளிட்ட கீரைகளில் வாரத்தில் இரு நாட்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்

ADVERTISEMENT

பீட்ரூட் ரத்தத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடல் புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. பீட்ரூட் சாறு (beetroot benefits) அல்லது சாலட் உட்கொள்வது நன்மை பயக்கும். அதுபோலவே பீட்ரூட் பொறியல் அல்லது குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.

மாதுளம்பழம்

மாதுளை இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு பழமாக உள்ளது. இது ரத்த சோகையைச் சரிசெய்ய உதவுகிறது.  தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது பலவீனம் மற்றும் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கும். அடிக்கடி மாதுளை ஜூஸ் (Pomegranate) குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

வெல்லம்

வெல்லம் இரும்புச்சத்தின் இயற்கையான மூலமாகக் கருதப்படுகிறது. இது உடலில் ஹீமோகுளோபின்அளவை அதிகரிக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகோ அல்லது வேர்க்கடலையுடனோ வெல்லத்தை (Jaggery)  உட்கொள்வது அதன் செயல்திறனை அதிகரிக்கும். இது உடனடி ஆற்றலையும் வழங்குகிறது.

பருப்பு, பயறு வகைகள்

கொண்டைக்கடலை, பயறு மற்றும்  பீன்ஸ் போன்ற பருப்பு (Pulses and Beans) வகைகளிலும் கணிசமான அளவு இரும்புச்சத்து உள்ளது. அவை ரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுவது மட்டுமல்லாமல், புரதத்தையும் வழங்குகின்றன. அவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது நன்மை தரும்.

வைட்டமின் சி -யும் முக்கியம்

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் வைட்டமின் சி-யை (vitamin C) உட்கொள்வது அவசியம். ஏனெனில் இது இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. தேநீர் மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வது இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும். ஆகவே உணவுக்குப் பிறகு உடனடியாக அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share