சீரகப்பொடி, எலுமிச்சை கலந்து தயாரிக்கப்படும் பானம் தொப்பையை குறைக்க உதவுகிறது.
இப்போது இளைஞர்கள் உள்பட பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது தொப்பைதான். பலருக்கு டீ ஷர்ட் போட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட தொப்பை (belly fat) காரணமாக அதனை போட முடியாத சூழல் இருக்கும். தங்களுக்கு பிடித்தமான உடைகளைக் கூட அணிய முடியாது. தொப்பையால் பலரும் பலவிதமான சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். கம்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யாதது, துரித உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் தொப்பை ஏற்படுகிறது.
உடல் எடையைக் குறைக்கவும் தொப்பையைக் குறைக்கவும் ஜிம்மில் மணிக்கணக்கில் கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டும் முக்கியமல்ல, உணவுக் கட்டுப்பாடும் (Food Control) மிகவும் அவசியமாகும். குறிப்பாக நம் சமையலறையில் காணப்படும் சில இயற்கைப் பொருட்களைக் கொண்டு தொப்பையைக் கரைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், இரவில் நாம் தூங்கச் செல்லும் முன்பு இந்த பானத்தை குடித்தால் தொப்பை நன்றாக குறையும்.
தொப்பையை கரைக்கும் பானம்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் சீரகப் பொடி (jeera powder) அல்லது மஞ்சள் பொடியைக் கலந்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்க வேண்டும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தவறாமல் அருந்த வேண்டும். அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இது இரவில் நமது உடல் வெளிப்புறமாக ஓய்வெடுத்தாலும், உடலுக்குள் கொழுப்பை எரிக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் தொப்பை எளிதில் கரைகிறது.
நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது
சீரகப் பொடி கலந்த பானத்தை குடிப்பதால் தொப்பைக் கொழுப்பு கரைவது மட்டுமல்லாமல், உடலுக்கு வேறு சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. உடல் சோர்வும் மன அழுத்தமும் குறைந்து, இரவில் (peaceful sleep) நிம்மதியாக உறங்கலாம். நல்ல உறக்கம் உடல் எடை குறைப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும், காலையில் நீங்கள் எழும்போது வயிறு காலியாக இருப்பதால் கேஸ், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகிறது. ஒரு வாரம் மட்டும் தவறாமல் பின்பற்றினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்
8 மணிக்கே உணவை சாப்பிட்டுவிட வேண்டும்
சீரகப் பொடி பானத்தை அருந்துவதோடு சில விஷயங்களையும் பின்பற்ற வேண்டும். இரவு 8 மணிக்கு முன் இரவு உணவை முடிக்க வேண்டும். இது உணவு எளிதில் செரிமானம் (Digestion) ஆக உதவுவதோடு, அது உடலில் கொழுப்பாகச் சேர்வதையும் தடுக்கிறது. மாவுச்சத்து அதிகமுள்ள அரிசி அல்லது எண்ணெய் கலந்த துரித உணவுகளை இரவில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, எளிதில் செரிமானம் ஆகும் சப்பாத்தி அல்லது காய்கறி சாலட்களை உட்கொள்வது, உங்கள் உடல் எடையை மிக விரைவாகக் குறைக்க உதவும்.
இந்த விஷயங்களை மறக்க வேண்டாம்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடப்பது, உடற்பயிற்சிகள் (Exercises) செய்தால் சீரகப் பொடி பானம் குடிப்பதன் பலன்கள் இரண்டு மடங்காகும். எந்தவித ரசாயனங்களோ அல்லது பக்க விளைவுகளோ இல்லாமல் எளிதாக தொப்பையை குறைக்க சீரகப் பொடி பானத்தை தினமும் இரவில் குடியுங்கள். உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள பிடிவாதமான கொழுப்பிற்கும், தொப்பைக்கும் விடைகொடுங்கள்.
