முதலில் சொன்ன ‘மின்னம்பலம்’.. ‘அந்த’ 3 துறை ஃபைல்கள்.. திமுகவுக்கு விஜய் பகிரங்க எச்சரிக்கை!

Published On:

| By Mathi

Files on 3 Departments on My Table- CM Vijay Warns DMK

”முந்தைய திமுக ஆட்சியின் 3 துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம்” என்று முதல்வர் விஜய் (CM Vijay) சட்டசபையில் எச்சரிக்கை விடுத்தார்.

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ”ஊழல்” ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு குறி? பரபரக்கும் தலைமை செயலகம்!” என கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியிட்ட செய்தியில், “நிதி அமைச்சர் மரியவில்சன் சட்டசபையில பேசும் போது, , “3 டிபார்ட்மெண்ட் பைல்ஸை நிதித்துறை மூலமா ஆடிட் பண்ணி சிஎம் விஜய்கிட்ட கொடுத்திருக்கோம்”னு சொல்லி இருந்தாரு…

ADVERTISEMENT

சிஎம்கிட்ட ‘சும்மா’ இந்த டிபார்ட்மெண்ட் பைல்ஸ் கொடுக்கலைங்க.. ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்ல எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கு? எந்தெந்த புராஜெக்ட்ல எவ்வளவு இழப்பு?ன்னு பிற மாவட்டங்களுக்கும் போய் விசாரிக்கப்பட்டுச்சு.. அப்படி நடத்தப்பட்ட விசாரணையில, மாஜி அமைச்சர்களுக்கு எவ்வளவு கமிஷன் போனது? ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு போன பங்கு என்ன? அப்படிங்கிற விவரங்களையும் டீட்டெயிலா கலெக்ட் பண்ணி முழு ரிப்போர்ட்டாதான் சிஎம் விஜய்கிட்ட கொடுத்திருக்காங்க..” என நாம் சொல்லி இருந்தோம்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய், “3 டிபார்ட்மெண்ட் பைல்” குறித்து இன்று (ஆகஸ்ட் 19) பகிரங்கமாக பேசினார்.

ADVERTISEMENT

ஆதாரங்களை வைத்திருக்கும் முதல்வர்

சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது குறுக்கிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ,”நேற்று கூட மூத்த உறுப்பினர் எ.வ.வேலு பேசும்போது, சமஸ் அவர்களுடைய ஒரு புத்தகத்தை கூட காட்டினாங்க. நான் சமஸ் அவர்களுடைய வார்த்தைகளை நல்லா படிக்கக்கூடிய ஒரு ரீடர். அவர் இன்னொரு ஆர்டிக்கிள் எழுதியிருந்தார். ஆர்டிக்கிளின் தலைப்பு என்ன தெரியுமா? “விஜய் 100 ஊழலுக்கு எதிரான ஒரு அடி”.

என்ன பேசினாலும் “ஆதாரம் காட்டுங்கள், ஆதாரம் காட்டுங்கள்” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அமைச்சர் பெருமக்கள் எழுந்து பேசுகிறபோதே தவறு நடந்திருக்கலாம் என்று அவரே சொல்லுகிறார். “தவறு நடந்திருக்கலாம்” என்று ஒப்புக்கொண்டதற்கு ஒரு படியான நன்றியை தெரிவித்துக்கொண்டு, ஆதாரங்களை நாங்கள் காட்டும்போது இப்படி பேசுகிறார்கள்.. மாண்புமிகு முதலமைச்சர் ஆதாரங்களை வைத்திருக்கிறார்.. அவர் ஒருவேளை எடுத்து காட்டிவிட்டார் என்று சொன்னால், அவர்கள் நிலைமையை நினைத்து பார்த்தேன். கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது” என்றார்.

ADVERTISEMENT

(அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதாரம் இருக்கிறதா? என்ன ஆதாரம் இருக்கிறது என கேள்வி கேட்டனர்)

திமுகவுக்கு விஜய் பகிரங்க எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசியதாவது: நான் சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன்.. ஆதாரம் ஆதாரம்னு கேட்கிறாங்க… ஒரு ஒன் வீக் பேக் மாண்புமிகு நிதி அமைச்சர் பேசும்போது, ஒரு மூணு டிபார்ட்மெண்ட்ல இருந்து ரிவ்யூ பண்ணி அந்த ஃபைல்ஸ் எல்லாம் என் டேபிள்ல இருக்குன்னு சொன்னாரு.

அது ஏதோ போகிற போக்கில் அவர் சொல்லவில்லை. உண்மையிலேயே என் டேபிள்ல இருக்கு. அத்தனையும் ப்ரூஃப்போட இருக்கு. ஓபன் பண்ண வச்சிராதீங்க… எதை எப்போ ஓபன் பண்ணனுமோ, அப்ப கரெக்ட்டா எல்லாமே ஓபன் ஆகும். இவ்வாறு விஜய் கூறினார்.

ஆதாரத்தை காட்ட ஆரம்பிச்சா…

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “நம்முடைய மதிப்பிற்குரிய அண்ணன்கள் எல்லாருமே பேசுங்க.. பேசுங்கன்னு சொல்றாங்க.. ஆனா முதலமைச்சர் பேச ஆரம்பிச்சாருன்னா.. ஆதாரத்தை காட்ட ஆரம்பிச்சாருன்னா.. என்ன நடக்கும்னு இதில் இருந்தே நம்ம புரிஞ்சுக்க முடியும்” என்றார்.

இடைத்தேர்தலில் சில பேருக்கு நல்லது நடக்கனும்னு

மீண்டும் எழுந்த முதல்வர் விஜய், “மக்கள்கிட்ட எப்ப பேசனும்.. என்ன பேசனும்.. எப்படி பேசனும்.. எல்லாம் பேசிட்டுதான்.. அன்பா, ஆசையா, எங்க எல்லாரையும் இங்க உட்கார வெச்சிருக்காங்க.. நான் பேசுவேன்… பேசக் கூடாதுன்னு ஒன்னும் இல்லை. இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும் இல்லையா?” என்றார்.

7 முறை ஜெயிச்சிருக்கேன் – ஐ.பெரியசாமி

இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, “நாங்க அன்பா, ஆசையா பேசியதால்தான் ஒரே தொகுதியில் 9 முறை நிற்கிற வாய்ப்பு கிடைச்சது.. 7 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.. அதுவும் தமிழகத்தில் 2 முறை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றியை வழங்கி இருக்கிறார்கள். அந்த அங்கீகாரத்தை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share