வைஃபை ஆன் செய்ததும், “நா ரெடிதான் வரவா அண்ணன் நா இறங்கி வரவா.. எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. செம்ம பாட்டுடன் களத்துல இறங்குறீங்க போல..
நாம எங்க இறங்க போறோம்.. சிஎம் விஜய்தான் இறங்கி அடிக்கப் போறாருன்னு சொல்றாங்க..

சட்டசபை கூட்டத்தை பார்த்துட்டு அப்படியே கோட்டையில அதிகாரிகள்கிட்ட பேசிகிட்டு இருந்தோம் ப்ரோ.. அப்ப நம்மிடம் பேசிய சீனியர் அதிகாரிகள், “சிஎம் விஜய்யின் ‘சட்டசபை’ ஸ்டைல் மாறிடுச்சு பார்த்தீங்களா.. சட்டசபைக்குள் நுழைந்ததும் பொதுவாக வணக்கம் வெச்சுட்டு அமைதியாக உட்கார்ந்து இருப்பாரு.. ஆனா இப்ப அப்படி இல்லையே.. சட்டசபைக்குள் நுழையும் போதே ரொம்பவே சிரிச்ச முகத்துடன் வர்றாரு.. அப்படியே ஒரு வாக் போற மாதிரி போய் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தரப்புக்கு வணக்கம் வெச்சுட்டு சீட்ல உட்காருகிறார்.. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுறப்ப ரசிச்சு கேட்கிற மாதிரி ஆக்ஷன்ஸை வெளிப்படுத்துறாரு..
அதுக்காக சிஎம் ‘சாஃப்ட்’ அப்ரோச் மோடுக்கு போயிட்டாருன்னு நினைக்காதீங்க.. சட்டசபை கூட்டத் தொடர் முடியட்டும்னு வெயிட் பண்றாரு..
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிச்சிருக்கு.. இந்த தடையை கிளியர் பண்ணிட்டு தேர்தல் நடத்தனும்னு சிஎம் விஜய் நினைக்கிறாரு..
அப்படி இடைத்தேர்தல் களத்துக்கு போகும் போது, “திமுக ஊழல் கட்சி.. பார்ட்டி பண்ட் அப்படிங்கிற பேரு கவர்மெண்ட் பணத்தை வீட்டுக்கு கொண்டு போயிட்டாங்க…”ன்னு மக்கள்கிட்ட ஸ்டிராங்கா பேசுறதுக்காக திமுக மாஜி அமைச்சர்கள் மீது ஆக்ஷன் எடுத்தாகனும்னு தீவிரமா இருக்கிறார்.. சட்டசபை கூட்டம் முடிஞ்ச உடனே திமுக மாஜிக்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தனும் அப்படிங்கிறதுதான் சிஎம் விஜய்யின் ஸ்கெட்ச்.
சிஎம் விஜய் இப்படி ஒரு ரூட்ல இருந்தா, தலைமை செயலாளர் சாய்குமார் வேற ஒரு ’ஆபரேஷனில்’ இருக்கிறார்…

தேர்தல் நேரத்துல தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிவிட்டு தேர்தல் ஆணையத்தால் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்..
பொதுவாக ஆட்சி மாறும் போது, முந்தைய அரசின் தலைமை செயலாளரை மாத்திட்டு அதுக்கு பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடக்கும்.. ஆனா சிஎம் விஜய் கவர்மெண்ட் அப்படி எல்லாம் எதுவும் செய்யலை..
தலைமை செயலாளர் சாய்குமாரை மாற்றவில்லை.. அவருடைய பதவி காலம் ஆகஸ்ட் 31-ந் தேதி முடியுது.. ஆனா அவருக்கு 6 மாதம் பதவி நீட்டிப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் சிஎம் விஜய்.
1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார், தமிழ்நாட்டுல மதுரை, தருமபுரி, விருதுநகர் மாவட்டங்களில் கலெக்டரா இருந்த சாய்குமார் மின்வாரியம், டிட்கோ, செய்தித்தாள் காகித நிறுவனம் துறைகளின் தலைவராகவும் இருந்தார்.. பொதுப்பணித் துறை செயலாளராகவும் இருந்தார்..
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தப்ப அவருக்கு கிரேடு 1 முதன்மைச் செயலாளராக- தனிச்செயலாளராக இருந்தாரு.. ஆனாலும் சிஎம் விஜய், சாய்குமாரை மாற்றாமல் இருக்கிறதுக்கு காரணம் அவர் நேர்மையான அதிகாரின்னு நம்புறதாலதான்..
இப்ப தலைமை செயலாளர் சாய்குமார் கையில எடுத்திருக்கிற ஆபரேஷனே, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராகத்தான்.. அவரைப் பொறுத்தவரைக்கும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், ஆட்சிக்கு தகுந்தது போல தன்னை மாத்திகிட்டு ரொம்பவே ’கரெப்ட்’ ஆகிட்டாங்கன்னு நினைக்கிறாரு..

இதனால உளவுத் துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம், ”அந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகளின் டிபார்ட்மெண்ட்ல எப்படி எல்லாம் ஊழல் நடந்தது? அவங்களோட சொத்து மதிப்பு எப்படி எல்லாம் எகிறி இருக்கு? அந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பினாமிகள் யாரு?” ன்னு அத்தனை ‘ஜாதகத்தை’யும் விலாவாரியாக கொடுக்க சொல்லி இருக்கிறார்..
தலைமை செயலாளர் சாய்குமாரைப் பொறுத்தவரைக்கும், சிஎம் விஜய், திமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கிற மாதிரி திமுக ஆட்சியில ஊழல் முறைகேடுகளுக்கு துணை போன 6 ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஜெயிலுக்கு அனுப்பிடனும்னு நினைக்கிறாரு..

இன்னொரு விஷயத்தையும் நீங்க கவனிக்கனும்.. நிதி அமைச்சர் மரியவில்சன் சட்டசபையில பேசும் போது, , “3 டிபார்ட்மெண்ட் பைல்ஸை நிதித்துறை மூலமா ஆடிட் பண்ணி சிஎம் விஜய்கிட்ட கொடுத்திருக்கோம்”னு சொல்லி இருந்தாரு…
சிஎம்கிட்ட ‘சும்மா’ இந்த டிபார்ட்மெண்ட் பைல்ஸ் கொடுக்கலைங்க.. ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்ல எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கு? எந்தெந்த புராஜெக்ட்ல எவ்வளவு இழப்பு?ன்னு பிற மாவட்டங்களுக்கும் போய் விசாரிக்கப்பட்டுச்சு.. அப்படி நடத்தப்பட்ட விசாரணையில, மாஜி அமைச்சர்களுக்கு எவ்வளவு கமிஷன் போனது? ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு போன பங்கு என்ன? அப்படிங்கிற விவரங்களையும் டீட்டெயிலா கலெக்ட் பண்ணி முழு ரிப்போர்ட்டாதான் சிஎம் விஜய்கிட்ட கொடுத்திருக்காங்க..

1996-2001-ல் கலைஞர் முதல்வராக இருந்தப்ப முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சர்கள் மீது வழக்கு போடும் போது அந்த துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளும் வழக்குகளில் சேர்க்கப்பட்டாங்க.. அந்த மாதிரி, திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடும்போதே இந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் அதுல சேர்க்கப்படுவாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
