சிபிஐ, சிபிஎம்-க்கு எதிரான சர்ச்சைக்குரிய ’சுற்றறிக்கை’ வாபஸ்!

Published On:

| By Mathi

Controversial Circular Against CPI and CPI(M) Withdrawn

சிபிஐ, சிபிஎம் கட்சி உறுப்பினர்களி விவரங்களை சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளதாவது: கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க சுற்றறிக்கை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கையை திரும்ப பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்கு அய்யாசாமி வட்டாட்சியர் (பயிற்சி) பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரச்சனையில் உடனடி தலையீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share