முன்பெல்லாம் தீபாவளி ஆஃபர், பொங்கல் ஆஃபர், ஆடித் தள்ளுபடி போன்ற வார்த்தைகளைப் பண்டிகைக் காலங்களில் கேட்டிருப்போம். தற்கால டிஜிட்டல் உலகில் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்( Great Indian Festival)’, ‘பிக் பில்லியன் டேஸ்( Big Billion days)’ போன்ற வார்த்தைகளைத் தான் பண்டிகைக் காலங்களில் பெரும்பாலும் கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு ‘அமேசான்’, ‘ஃபிலிப் கார்ட்’ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளின் தாக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசானின் ‘ கிரேட் இந்தியன் ஃப்ஸ்டிவல்’ மற்றும் ஃபிலிப் கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ ஆகிய தள்ளுபடி காலம் நாளை(அக்.8) தொடங்கவுள்ளது. இதில் பிரைம் யூசர்ஸ் என சொல்லப்படும் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இன்று (அக்.7) நள்ளிரவே தொடங்குகிறது.
பல்வேறு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த ஆன்லைன் செயலிகள் பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதனால், இந்த செயலிகளின் வழக்கமான பண்டிகை கால விற்பனை சதவீதமான 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான், ஃபிலிப் கார்ட் மட்டுமின்றி மீஷோ, ஜியோ மார்ட், போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளும் இந்த பண்டிகை கால விற்பனைகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. இந்த பண்டிகை கால விற்பனைகளில் ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.
இந்த நாட்களில் பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1) பொருட்களை வாங்கும் போது அது சரியான பேக்கேஜ்ஜில் வந்துள்ளதா என சரி பார்த்து வாங்க வேண்டும். அதாவது செக்யூர் பேக்கேஜ் (secure package). அப்படி நீங்கள் வாங்கும் பொருட்கள் செக்யூர் பேக்கேஜ்ஜில் வரவில்லை என்றால், அந்தப் பொருளுக்கான இழப்பீட்டை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2) நீங்கள் பொருளை வாங்கி முதலில் பிரிக்கும் பொழுது அதனை உங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், பொருளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் அதை ஆதாரமாகக் காட்ட முடியும்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகாலையில் அடுத்தடுத்து விபத்து: இருவர் பலி!
Asian Games 2023: 100 பதக்கங்கள்… புதிய வரலாறு படைத்த இந்தியா!
