சென்னையில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு!

Published On:

| By Minnambalam

சென்னையில் புதன்கிழமை (அக்டோபர் 26) அன்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதற் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இந்த முகாமில் விவரிக்கப்படும்.

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக மூன்று நாட்கள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் மேப்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து ஐந்து நாட்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 044-22252081, 22252082, 96771 52205. 94445 56099 ஆகிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்களைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

-ராஜ்

”தனியார்‌ நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்‌ மாநில அரசிற்கு இல்லையா?” – மநீம கேள்வி

உக்ரைன் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகள் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share