உக்ரைன் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகள் உத்தரவு!
ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து உக்ரைன் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
இந்த நிலையில், நான்கு பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். இதனால் கெர்சன் நகரில் இருந்து உக்ரைன் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கெர்சன் நகரின் மீது ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது.
எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-ராஜ்
காந்தாரா – ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டிய படம்: கங்கணா
கிச்சன் கீர்த்தனா – தீபாவளி ஸ்பெஷல்: வயிறு முட்ட சாப்பிடுபவரா நீங்கள்?