கதை எப்போ சொல்வீங்க..?! EMI Tamil Movie Review 2025
’இஎம்ஐ’ (EMI) எனும் வார்த்தையைக் கேட்டவுடன் என்ன தோன்றும்? ஆங்கிலத்தில் இந்த வார்த்தைக்கான விரிவாக்கம் ‘Equated Monthly Instalment’ என்பதாகும். தமிழில் ‘மாதத் தவணை’ என்று சொல்லலாம். குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் அடைக்கும் வழிமுறை இது. கையில் காசு இல்லாத சூழலில், ஒருவர் ஒரு பொருளைக் கடனாக முன்கூட்டியே வாங்கிவிட்டு அதற்கான பணத்தைச் செலுத்த இம்முறை பயன்படுத்தப்பட்டது. இன்று, அதுவே எங்கும் வியாபித்திருக்கிறது.
இஎம்ஐ இன்று பலரது வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி என்று வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார், வீடு என்று பல தேவைகளை நிறைவேற்றுவதற்கான வழிகளில் முதன்மையானதாகவே அதுவே இருக்கிறது.
அதனால் விளைந்த நன்மைகளைவிடத் தீமைகளின் சதவிகிதமே அதிகம் என்பது போலச் சமீபகாலமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அதைச் சொல்வது போல இருந்தது ‘இஎம்ஐ (மாதத்தவணை)’ பட ட்ரெய்லர். EMI Tamil Movie Review 2025
சதாசிவம் சின்னராஜ் இயக்கி இதில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் சாய் தன்யா, செந்திகுமாரி, பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எப்படி இருக்கிறது ‘இஎம்ஐ (மாதத்தவணை)’? EMI Tamil Movie Review 2025

கதை ஆரம்பிக்கும் இடம்! EMI Tamil Movie Review 2025
ஒரு இளைஞன். ஒரு இளம்பெண்ணைக் காதலிக்கிறார். அதனை அப்பெண்ணிடம் தெரிவிக்கப் படாத பாடு படுகிறார். ஒருகட்டத்தில் அந்தப் பெண் அவரது காதலை ஏற்கிறார். அதற்கடுத்து, அந்த விஷயம் பெண்ணின் தந்தைக்கும் பிறகு அந்த இளைஞரின் தாய்க்கும் தெரிய வருகிறது. இரு குடும்பங்களும் கலந்தாலோசித்து கல்யாணம் செய்து வைக்கின்றனர். EMI Tamil Movie Review 2025
திருமணத்திற்கு முன்னர் காதலிக்கும் பெண்ணின் கவனத்தை ஈர்ப்பதற்காக, வாழ்வில் முதன்முறையாக மாதத்தவணையில் ஒரு ‘புல்லட்’டை வாங்குகிறார் அந்த இளைஞன். திருமணத்தின்போது மனைவிக்கு கார் பரிசளிக்கிறார். இது போக மொபைல் போன் உள்ளிட்ட ‘காஸ்ட்லி’யான சிலவற்றை வாங்கித் தருகிறார்.
ஒருகட்டத்தில் அவரது வேலை பறி போகிறது. புதிய வேலை தேடுவதற்குள் மாதத்தவணைகள் கட்ட முடியாமல் போகிறது. EMI Tamil Movie Review 2025
கடன் கொடுத்த நிறுவனங்கள் அவரது கழுத்தை இறுக்கிப் பிடிக்கின்றன. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதுவே ‘இஎம்ஐ (மாதத்தவணை)’ படத்தின் கதை.
‘ஆஹா இது சமூகத்துல நடக்கிற விஷயம் தானே’ என்று இக்கதையைக் கேள்விப்படுபவர்களுக்குத் தோன்றலாம். ஆனால், இந்த கதையை இன்னும் சுவையூட்டித் திரையில் தருவதற்குப் பதிலாக ‘இருக்கையில் நம்மை இறுக்கக் கட்டி வைத்து அடித்தாற்’ போன்ற உணர்வைத் தந்திருக்கிறது இத்திரைப்படம்.

ஆறுதலான விஷயங்கள்! EMI Tamil Movie Review 2025
’இஎம்ஐ (மாதத்தவணை)’ படத்தை இயக்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜ், தானே நாயகனாக நடிக்க வேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை. அதற்கான உடல்வாகு, முகத்தோற்றம் அவரிடம் இருக்கிறது. EMI Tamil Movie Review 2025
ஆனால், திரையில் தான் இப்படித் தெரிந்தால்தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்து உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் தவறியிருக்கிறார்.
மிக முக்கியமாக, நாயக பாத்திரத்தை ரசிக்கிற வகையில் காண்பிக்கிற காட்சிகளே இதில் இல்லை. ஆனால், ‘இதெல்லாம் ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்’ என்று சில அபத்தங்களைக் கொண்டிருக்கிறது முதல் பாதி. படக்குழுவினரில் எத்தனை பேர் அதனை ஆட்சேபித்தார்கள் என்று தெரியவில்லை. EMI Tamil Movie Review 2025
‘நாயகனும் நாயகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்’ என்பதை ஒரு வரியில் ‘வாய்ஸ் ஓவரில்’ சொல்லி முடித்திருக்கலாம். அதற்குப் பதிலாக, அதனைக் காட்சிகளாக்கி நம்மைச் சோதித்திருக்கிறார். EMI Tamil Movie Review 2025
அது தொடர்பான சில விஷயங்களோடு இடைவேளை வரும்போது, ‘அப்போ இனிமேதான் கதை சொல்ல போறாங்களா’ என்ற எண்ணம் நம்மை வந்தடைகிறது.
நயாகன் வாங்கிய பொருட்களுக்கான மாதத்தவணையைக் கட்ட நாயகனும் அவரது குடும்பமும் எவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாகிறது என்பதைத் திரைக்கதையில் விவரிக்கவே இல்லை. போலவே, அவற்றை வாங்குவதற்கான தேவைகளும் சரிவரச் சொல்லப்படவில்லை.
இது போன்றதொரு படத்தில் அதுதானே யுஎஸ்பி ஆக இருக்க முடியும். அதுவே இல்லை எனும்போது இதனைப் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன கிடைக்கும்?
இப்படத்தில் பிளாக் பாண்டி, அவரது ஜோடியாக வருபவர் இரண்டாம் பாதியில் இடம்பெறும் ‘ஐஸ்க்ரீம்’ காட்சி, ஆதவன் மற்றும் ஓஏகே சுந்தர் வருகிற காட்சிகள் மற்றும் கடைசி பத்து நிமிடக் காட்சிகளே மனதைத் தொடும்படியாக உள்ளன.
நாயகி சாய் தன்யா தொண்ணூறுகளில் வந்த தமிழ் திரைப்பட, சீரியல் நடிகை ஒருவரை நினைவூட்டுகிறார். ’நடிக்கிறார்’ என்ற எண்ணம் தோன்றுகிற வகையில் திரையில் வந்து போனாலும், அவரது வசன உச்சரிப்பும் முக பாவனைகளும் காட்சிக்குப் பொருத்தமாகத் தெரிகின்றன.
நாயகனின் தாயாக வரும் செந்தி குமாரி தான் தோன்றுகிற பிரேம்கள் இயல்பாகத் தெரிய வேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார். பிளாக் பாண்டி வருகிற காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றன.
லொள்ளுசபா மனோகர், ஆதவன், பேரரசு என்று ஒரு சில தெரிந்த முகங்களும் இப்படத்தில் உள்ளனர். இது போக நாயகனின் நண்பராக வரும் இன்னொருவரும் நம் கவனம் ஈர்க்கிறார். இது போகத் திரையில் சிலர் வந்து போயிருக்கின்றனர்.
தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை ஸ்ரீநாத் பிச்சையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஆனால், அவரும்கூட தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான ஒரு திரைப்படத்தைப் பார்க்கிற உணர்வைத் தனது பின்னணி இசையில் உருவாக்கியிருக்கிறார்.
விஜய், சிம்பு, தனுஷ் பாணியில் நாயகனுக்கு அறிமுகப் பாடல், மது அருந்திவிட்டுப் பாடும் பாணியிலமைந்த பாடல் உட்படச் சில பாடல்கள் இதில் வருகின்றன. அதில் ‘இஎம்ஐ’ பாடல் மட்டும் ஓகே ரகம்.
வெற்றிமாறன் படங்களைத் தொகுக்கிற ராமர், இதில் படத்தொகுப்பாளர். ஆனால், இதனைப் பார்க்கையில் அந்த எண்ணம் சுக்குநூறாகிறது.
தானே இயக்கி நடிக்க வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் சதாசிவம் சின்னராஜ். அதற்குத் தக்கபடி ஒரு கதைக்கருவையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
’இஎம்ஐ (மாதத்தவணை)’ என்ற டைட்டிலை பார்த்துவிட்டு படம் பார்க்க வருபவர்களுக்கு மனதில் சில கற்பனைகள் தோன்றும். அவற்றுக்குப் பதில் தரும் வகையில் திறம்படத் திரையில் கதை சொல்வதில் பத்து சதவிகிதம் திருப்தியைக் கூடத் தரவில்லை இப்படம்.
இந்த ஐடியாவை பயன்படுத்தி, இஎம்ஐயால் மனிதர்கள் படுகிற கஷ்டங்களை மனதைத் தொடுகிற வகையிலும், சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகும் வகையிலும் ரசிகர்களின் வாழ்வோடு பொருந்திப் போகிற படைப்பொன்றைத் தரலாம் என்ற எண்ணத்தை அறிமுக இயக்குனர்களிடம் விதைக்கிறது இந்த ‘இஎம்ஐ (மாதத்தவணை)’. அது மட்டுமே இப்படத்தில் இருந்து கிடைக்கிறது.
உதயசங்கரன் பாடகலிங்கம்