ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் : விமர்சனங்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் வெளிச்சந்தையில் இருந்து குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது. 

தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் அதிகபட்சமாக ரூ.35 வரை கொடுத்து வாங்கப்படவுள்ளது. 

ADVERTISEMENT

முந்தைய குறைந்த விலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு தற்போது இவ்வளவு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது நிர்வாகத் திறமையின்மை அல்லது மிகப்பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார் 

ADVERTISEMENT

இதுகுறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  ”நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே)

மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

ADVERTISEMENT

Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு:

கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share