மாம்பழ போளி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய செய்முறை!

Published On:

| By Minnambalam Desk

மாம்பழத்தை வைத்து ஜூஸ், மில்க்‌ஷேக் என பலவிதமான உணவுகளை செய்து பார்த்திருப்போம். ஆனால், மாம்பழத்தை வைத்து சுவையான போளி செய்தால் எப்படி இருக்கும்? வழக்கமான போளிக்கு சற்று வித்தியாசமாக, மாம்பழத்தின் மணமும் இனிப்பும் கலந்த இந்த போளியை வீட்டிலேயே எளிதாக செய்து பார்க்கலாம். 

மாவு தயாரிப்பது எப்படி?

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் மைதா, தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையான மாவாக பிசைய வேண்டும். பின்னர் சிறிது நெய் தடவி, மாவை சுமார் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

மாம்பழ பூரணம் தயார் செய்வது

ADVERTISEMENT

வாணலியில் சிறிது நெய் விட்டு, அரை கப் ரவையை மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். ரவை நிறம் மாறாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதனுடன் ஒரு மாம்பழத்தை அரைத்து சேர்க்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் சர்க்கரை, ஒரு கப் பசும்பால் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். கலவை வாணலியில் ஒட்டாமல் பதமாக வரும் வரை தொடர்ந்து கிளறி, சிறிதளவு உப்பு, ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்தால் மாம்பழ பூரணம் தயார். 

ADVERTISEMENT

மாம்பழ போளி செய்வது எப்படி?

தயார் செய்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, நடுவில் பூரணத்தை வைத்து நன்றாக மூடவும். பின்னர் சப்பாத்தி கட்டையில் மெதுவாகத் தேய்த்து போளி வடிவத்துக்கு கொண்டு வர வேண்டும்.

தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து சிறிது நெய் ஊற்றி, போளியைப் போடவும். இருபுறமும் நெய் விட்டு மெதுவாக வேகவைத்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கலாம். மாம்பழ மணத்துடன் மென்மையான இனிப்பு போளி தயார். 

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share