சமையலறையில் எலுமிச்சையைப் பயன்படுத்திவிட்டு அதன் தோலை குப்பையில் போடுவது வழக்கம்.
ஆனால், சருமப் பராமரிப்பிலும் எலுமிச்சை தோலை பயன்படுத்தலாம் என்று அழகு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இதில் உள்ள இயற்கை அமிலத்தன்மை மற்றும் வாசனைத் தன்மைகள் காரணமாக, சருமத்தை சுத்தப்படுத்தும் சில வீட்டு பராமரிப்பு முறைகளில் இதை சேர்க்கலாம்.
ஸ்க்ரப் ஆக பயன்படுத்தலாம்
எலுமிச்சை தோலை நன்றாகத் துருவி, அதனுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஸ்க்ரப் தயாரிக்கலாம். முகத்தில் மெதுவாகப் பயன்படுத்தி, சில நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். இது சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை அகற்ற உதவும் என கூறப்படுகிறது.
ஃபேஸ் மாஸ்க், டோனராகவும் பயன்படுத்தலாம்
எலுமிச்சை தோல் பொடியுடன் தயிர், தேன், மஞ்சள் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். அதேபோல், தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி, முகம் கழுவும் நீராக பயன்படுத்தும் முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் ஃபேஸ் பேக்
எலுமிச்சை தோலை எண்ணெயில் ஊறவைத்து தயாரிக்கப்படும் கலவையை முகப் பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். மேலும், எலுமிச்சை தோல் பொடியுடன் அரிசி மாவு, பால் மற்றும் தேன் கலந்து ஃபேஸ் பேக் போடலாம்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கவனம்!
எலுமிச்சை தோலை முகத்தில் பயன்படுத்தும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைக்கும் என்று கூற முடியாது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டுரை எச்சரிக்கிறது. எனவே, முதலில் சிறிய பகுதியில் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. பயன்படுத்திய பிறகு நேரடியாக சூரிய ஒளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
