திருச்சி சென்றுள்ள முதல்வர் விஜய்யை மதிமுக எம்.பி.துரை வைகோ வரவேற்றார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தற்போது திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக எம்.பி துரை வைகோ விஜய்யை வரவேற்றது கவனத்தை பெற்றுள்ளது.

தவெக ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், விஜய்க்கு நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று துரை வைகோ கூறி வருகிறார்.

அதே போன்று தனி சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்திருப்பீர்களா என்ற கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் திமுக சின்னத்தில் தான் போட்டியிட்டோம். நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டு, ஒருவேளை தொங்கு சட்டசபை உருவாகி ஆட்சிக்கு ஆதரவு கிடைக்காத நிலையில் ஏற்பட்டிருந்தால் மதிமுகவும் ஆதரவு தர வாய்ப்பிருக்கிறது. ஆனால் எங்களுக்குப் அந்த சூழ்நிலை வரவில்லை. ஏனென்றால் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடவில்லை” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
