சித்த மருத்துவர் ஷர்மிகா கூறிய மருத்துவ குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டதாக இந்திய மருத்துவ ஆணையத்தில் மேலும் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவரான ஷர்மிகா யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குறிய மருத்துவ குறிப்புகளை கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஒரு தினத்தில் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும். குழந்தை பிறப்பதற்கு இறைவன் அருள் வேண்டும்.
குளோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும் என கூறியிருந்தார்.
இதனால், சித்த மருத்துவத்தில் இல்லாதவற்றை ஷர்மிகா கூறுகிறார் என்று புகார்கள் எழுந்தன. இந்த விவாகரம் தொடர்பாக ஷர்மிகா கடந்த ஜனவரி மாதம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா கூறிய மருத்துவக் குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆணையத்தில் மேலும் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்திய மருத்துவ ஆணையரகம் ஷர்மிகாவை வீடியோவில் பதிவாகியிருந்த தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஆனால் முதல் முறையாக அவர் மீது எழுத்துப்பூர்வமான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார்களின் உண்மை தன்மையை முதலில் இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை செய்து கண்டறிய உள்ளது. அதன்பின் இந்த புகார்கள் மீது விசாரணையை தொடங்க உள்ளது.
மோனிஷா
