சால்வை விவகாரம் – கொச்சைப்படுத்த வேண்டாம் : நயினார் நாகேந்திரன்

Published On:

| By Kavi

முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்தது பேசுபொருளாகியிருக்கும் நிலையில்,  ’இதை கொச்சைப்படுத்த வேண்டாம்’ என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். 

சென்னையில்  வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.  நேற்றைய நிகழ்ச்சியின் போது கிளி பச்சை நிறத்தில் நீண்ட சால்வையை முதல்வர் விஜய்க்கு அணிவித்து மரியாதை தெரிவித்தார் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். 

ADVERTISEMENT

இது சமூக வலைதளங்களில் வைரலானதோடு, சிலர் கிண்டலும் செய்தனர். 

இந்தநிலையில்  சென்னையில் இன்று (அக்டோபர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு அவர்,  ”முதலமைச்சரை நான் நேரில் சந்தித்தேன், அவருக்குச் சால்வை அணிவித்தோம். அது ஒரு மரியாதை, நமக்கு அவர்தான் முதலமைச்சர். இன்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நமக்கு முதலமைச்சர் இல்லை. நயினார் நாகேந்திரனுக்கும் அவர்தான் முதலமைச்சர். திருப்பதி நாராயணனுக்கும் அவர்தான் முதலமைச்சர்.

நம்முடைய முதலமைச்சரை நாம் கௌரவப்படுத்த வேண்டும். பிரதமர் நம் நாட்டிற்கு வந்திருக்கின்றார், அவர் மிகப்பரிய தலைவர். அவரை வழியனுப்பி வைப்பதுதான் முறை… அதில் குறைபாடுகளை எல்லாம் கூறக்கூடாது. முதலமைச்சரை வரவேற்றது ஒரு சர்ச்சையாக இருக்கின்றது…

ADVERTISEMENT

தயவுசெய்து ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், அதையெல்லாம் யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். நம்முடைய முதலமைச்சர்; ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அவருக்கு மரியாதை செய்திருக்கின்றேன். அதைத் தயவுசெய்து யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share