நீட் (NEET) தேர்வை தடை செய்வது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக (DMK) மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
டி.ஆர். பாலு எம்.பி. கொடுத்த நோட்டீஸில், நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்; டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, ஒரு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
“நாட்டின் மருத்துவக் கல்வி கனவோடு உள்ள மாணவர்களின் அவல நிலை, நீட் தேர்வால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் அது தொடர்பான மாணவர்களின் தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று விதி 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார் திருச்சி சிவா.
