திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது 6 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகவும் கண்ணியக்குறைவாகவும் பேசியதாகக் காவல்துறைக்குப் புகார் அனுப்பப்பட்டது. தவெக நிர்வாகி ஜெகதீஸ்வரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளக் காவல்துறை அதிகாரிகள் முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பொதுவெளியில் அவதூறு பரப்பும் வகையில் பேசியது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share