கலைஞர் ஆட்சியிலேயே வந்துவிட்ட Motherson Group… விஜய்யின் லண்டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விளாசிய அப்பாவு

Published On:

| By Mathi

Ex Speaker Appavu Criticizes Vijay’s London MoU Deals

முதல்வர் விஜய் லண்டனில் Samvardha Motherson நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தொடர்பாக திமுகவின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மறைந்த தலைவர் கலைஞர், 2006-2011 வரை முதல்வராக இருந்த போது இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற Samvardha Motherson International Limited (SAMIL) part of the Motherson Group மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை, அன்றைய தொழில் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பி தொடர்பு கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு 2010 ஆண்டு அரசாணை ( GO NO.631) மூலம் ஒரக்கடம், மறைமலை நகர் ,
ஶ்ரீ பெரும்புதூர், வடகால், பொந்தூர் ஊரப்பாக்கம் மற்றும் குறுவன்மேடு போன்ற இடங்களில் மோட்டர் வாகன உதிரி பாகங்கள் இன்று வரை உற்பத்தி செய்து வருவதோடு, பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து வருவது உங்களுக்கு தெரியாத CM sir ?

ADVERTISEMENT

மேற்படி இந்திய தொழில் நிறுவனத்தின் முதலீட்டை “ஈர்க்கத்தான்” லண்டன் சென்றீர்களா? “வேறு ஈர்ப்பும்” இருக்கிறதா CM sir ?. இவ்வாறு அப்பாவு பதிவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share