”நிறுவனத்தின் பெயரே இல்லையே?” சர்ச்சையான விஜய்யின் லண்டன் பயணம் பற்றிய தமிழக அரசு அறிக்கை!

Published On:

| By Mathi

Vijay-London Trip

Vijay’s London Trip: முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (செப்டம்பர் 14) இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு சர்ச்சையாகி உள்ளது.

தமிழக அரசு இன்று இரவு 8.52 மணிக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதும் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.

ADVERTISEMENT

இந்நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது” என தெரிவித்தது.

இதில் ”ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம்” என்று மட்டும் இடம் பெற்றுள்ளது; அந்த முன்னணி நிறுவனத்தின் பெயர் என்ன? ஏன் அந்த நிறுவன பெயர் அரசின் செய்திக் குறிப்பில் இடம் பெறவில்லை? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share