கடும் எதிர்ப்புக்கு பின் குடியாத்தத்தில் அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி!

Published On:

| By Mathi

அண்ணா பிறந்தநாள் விழா

அண்ணா பிறந்த நாள் பேரணியை திமுக நடத்துவதற்கு குடியாத்தம் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

குடியாதத்தில் விநாயகர் சதுர்த்தியால் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி தர முதல்வர் விஜய் அரசு மறுத்தது சர்ச்சையானது. 5.09.2026ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மறுநாள் என்பதாலும், புதிய பேருந்து நிலையம் முதல் நேதாஜி சௌக் வரையுள்ள பகுதிகள் தினசரி பொதுமக்களின் அதிக பயன்பாடுள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகும். இப்பகுதிகளில் ஊர்வலம் நடத்தும் போது பொதுமக்களுக்கும், பொது போக்குவரத்துக்கும் நோயாளிகளுக்கும் அதிக இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடியாத்தம் போலீசார் அனுமதி மறுத்தனர்.

ADVERTISEMENT

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் 15.09.2026-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வரை ஊர்வலமாக செல்ல மனுதாரர் – S.சௌந்தரராசன், B.A, நகர மன்ற தலைவர், நெ.44/51, அழகு பெருமாள் கோயில் தெரு, பிச்சனூர், குடியாத்தம், வேலூர் மாவட்டம் என்பவர் அளித்த மனு மீது பரிசீலனை செய்து கீழ் நிபந்தனைகளுடன் 15.09.2026 ம் தேதி காலை 10.00 மணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தில் ரூ.11,000 கோடி முதலீட்டில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு.குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share