பிப்.22-ல் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- செல்வப்பெருந்தகையின் ’சென்னை’ ரியாக்சன்!

Published On:

| By Mathi

DMK COngress

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பேரியக்கம் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: எங்களுடைய கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை முடிந்த பிறகு பிப்ரவரி 22-ந் தேதியில் இருந்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி.

ADVERTISEMENT

களத்தில் முதன்மை களப் பணியாளராக திமுக தோழமை கட்சிகள் நிற்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மக்களை விரைவாக சந்திக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பம். பேச்சுவார்த்தை குழுவை உடனடியாக நியமித்த முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

டெல்லியில் புதிய மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி கலந்துரையாடினர். எல்லாம் நன்மைக்கே.. நன்மையில் முடியும்.. மீண்டும் ஆட்சி தொடரும்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி; திமுக தலைமையிலான இந்த கூட்டணி மிக மிக வலிமையானது. மீண்டும் இந்த ஆட்சி தொடரும் என்று மக்கள் ஏற்கனவே சான்றிதழ் கொடுத்துள்ளனர். தொடர் வெற்றியைப் பெறுவோம்.

திமுக தரப்பு தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்; பட்ஜெட் தயாரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

ADVERTISEMENT

ஆனால் எங்கள் தலைமை, கடைசி நிமிடத்தில் வேட்பாளர் தேர்வு முதல் அனைத்தும் தாமதமாகிறது என பார்க்கிறோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

முன்னதாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ”பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்காமல் இருப்பது காங்கிரஸ் தலைமைக்கு வருத்தத்தைத் தருகிறது. இதுபற்றி சென்னை திரும்பியதும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறேன். அப்போது காங்கிரஸ் தலைமையின் கருத்துகளை ஸ்டாலினிடம் கூறுவேன்” என தெரிவித்திருந்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share