DMK Mupperum Vizha Awards: திமுகவின் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்ட அறிக்கை:
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெறும். தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளும் பெறுவோரும்:
பெரியார் விருது – கு. செல்லப்பா (விவசாய அணி துணைச் செயலாளர்)
அண்ணா விருது – சேலம் ஜி.கே. சுபாஷ் (சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்)
கலைஞர் விருது – திருச்சி சிவா, எம்.பி. (கழக துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவர்)
பாவேந்தர் விருது – கனிமொழி என்.வி.என். சோமு (கழக மருத்துவ அணித் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
பேராசிரியர் விருது – மிசா எஸ். அகமது தம்பி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
மு.க.ஸ்டாலின் விருது – நா. இளையராஜா (இளைஞர் அணி துணைச் செயலாளர்)
முரசொலி செல்வம் விருது
இதேபோல முரசொலி அறக்கட்டளை சார்பில் “முரசொலி செல்வம்” விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 21.10.2024 அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற ‘முரசொலி செல்வம் படத்திறப்பு’ நிகழ்ச்சியில், “முரசொலி செல்வம் பெயரால் ஆண்டுதோறும் விருது வழங்குவது; அதனை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தக்கிணங்க; ஏற்கனவே 2025ஆம் ஆண்டிற்கான “முரசொலி செல்வம்” விருது மூத்த பத்திரிகையாளர் திரு. ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ப. திருமாவேலன் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம் விருது’ வழங்கப்படும் என அறிவிப்பதில் முரசொலி அறக்கட்டளை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
