டிஜிட்டல் திண்ணை: விஜய் கேபினட்டில் மோதல்! அப்செட் ஆனந்த்.. ’குறிவைத்து’ குழிபறிப்பு.. குமுறும் ‘ரசிகர்’ அமைச்சர்கள்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. சித்தர் பாட்டுக்கு ஜம்ப் ஆகிட்டீங்க?

ADVERTISEMENT

அப்படித்தான் சிஎம் விஜய் கேபினட்டில சிலரோட நிலைமையும் இருக்குதுங்க ப்ரோ.. இதை பத்தி தவெக மூத்த நிர்வாகிகளிடம் பேசுனப்ப, “எங்க பொதுச்செயலாளர் மினிஸ்டர் புஸ்ஸி ஆனந்த்தான் தவெக தொண்டர்களுக்கு எல்லாமும்.. கட்சியைப் பொறுத்தவரைக்கும் சிஎம்-க்கு அடுத்தது புஸ்ஸி ஆனந்த்தான்.. சட்டசபையிலும் சீனியர் அமைச்சர் அவர்தான்..

ஆனால் இப்ப நிலைமை சரியில்லை சார்.. சட்டசபையில அவரை இருக்கிற இடமே தெரியாம ஆக்கிட்டாங்க.. அதுவும் லைவ்ல நாடே பார்த்துகிட்டுதான் இருக்கு..
சரி. மத்த அமைச்சர்கள்தான் அப்படி ஓவர்டேக் செய்யுறாங்கன்னா, சிஎம் விஜய் கூட அப்படி செய்வாருன்னு ஆனந்த் எதிர்பார்க்கலை.. பொதுவாக சட்டசபையில ஆனந்த்கிட்டதான் அதிகமாக பேசுவார் சிஎம்.

ADVERTISEMENT

ஆனா இப்ப திடீர்னு செங்கோட்டையன்கிட்ட போய் உட்கார்ந்து பேசுறாரு.. அப்புறமா ஆதவ் அர்ஜூனாகிட்ட போய் பேசுறாரு.. இதனால தனக்கு கொஞ்ச கொஞ்சமா முக்கியத்துவம் இல்லாமலேயே போகுதேன்னு மினிஸ்டர் ஆனந்த் அப்செட்டில இருக்கிறார்..

அதோட, “விஜய்சார் கிட்ட என்னால எதுவுமே இப்ப பேசவும் முடியறதும் இல்லை.. நமக்கு ரசிகர்கள்தான் முக்கியம்.. அவங்க ஏதாவது கேட்கிறாங்க.. அவங்களுக்கு நல்லது எதுவும் செய்யலாம்னு பார்த்தா ஒன்னும் செய்யவும் விடமாட்டேன்னு சொல்றாங்க.. கட்சிக்கு நேத்து வந்தவங்கதான் இங்கே எல்லாமே பண்றாங்க.. பேசாம ரசிகர் மன்ற தலைவரா மட்டுமே இருந்திருக்கலாமோ”ன்னும் தனக்கு நெருக்கமானவங்ககிட்ட அமைச்சர் ஆனந்த் வேதனையை கொட்டி இருக்கிறார்.

ADVERTISEMENT

இதை பத்தி எல்லாம் விஷ்ணு ரெட்டியோ ஜான் ஆரோக்கியசாமியோ கண்டுக்கிறதே இல்லை.. தனக்கு சப்போர்ட் செய்யலைன்னும் அமைச்சர் ஆனந்த் வருத்தத்துல இருக்கிறார்..”ன்னு சொன்னாங்க ப்ரோ..

புஸ்ஸி ஆனந்த் மட்டுமல்ல.. அவர் அமைச்சர்களாக்கிய விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவங்களும் ரொம்பவே குமுறிகிட்டுதான் இருக்காங்க.. ஏன்னா அந்த அமைச்சர்களுக்கு எதிராக, விஜய் அமைச்சரவையில இருக்கிற சிலரே, திட்டம் போட்டு எதிர் பிரசாரத்தை தீவிரமா செஞ்சுகிட்டு இருக்காங்களாம்.

எந்த நேரத்துல தங்களை பத்தி எந்த பிரச்சனை எந்த ரூபத்துல வருமோன்னு ‘ரசிகர்’ மன்ற அமைச்சர்கள் பதற்றத்துலதான் இருக்காங்களாம் ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்கு

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share