எலும்புகள் எல்லோருக்கும் உண்டு.. திமுக எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் வன்னி அரசு எச்சரிக்கை!

Published On:

| By Mathi

DMK MLA Warned by Minister Vanni Arasu

முதல்வர் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன் என்று பேசியதால் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு விசிக துணைப் பொதுச்செயலாளரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளதாவது: சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share