டிஜிட்டல் திண்ணை: விஜய்க்கு செம்ம டிமிக்கி.. சீனியர் அமைச்சரின் ‘அடேங்கப்பா’ ‘சீக்ரெட் டீலிங்’!

Published On:

| By Minnambalam Desk

CM Vijay's Senior Minister's Secret Dealing

வைஃபை ஆன் செய்ததும், “என்ன சொல்வேன்..நான் என்ன சொல்வேன்.. எதை சொல்வேன்”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. தயங்காம சொல்லிடுங்க ப்ரோ..

அப்படீங்களா ப்ரோ.. கோட்டை பக்கம் போனப்ப காத்துல வாக்கு வந்த சேதிங்க ப்ரோ.. நம்மகிட்ட பேசுன அதிகாரிகள், “கேபினட்டுல சீனியருன்னு சொல்றாங்க.. சீக்ரெட் டீலிங்குல கழகங்களை காலி செய்யுறதிலேயும் ரொம்பவே சீனியர் சார்.. அதிகாரிகளான எங்களை எல்லாம் ”கூட்டிக்கினு” மீட்டிங் போட்ட அந்த சீனியர் மினிஸ்டர், “காண்டிராக் எடுக்கிற ஆளுங்ககிட்ட நீங்க அதிகாரிகள், உங்களுக்குன்னு 10% கமிஷன் வாங்கிக்கங்க.. சரிங்களா.. ஆனா அந்த கமிஷன் எனக்கு கரெக்ட்டா வந்துடனும்..

ADVERTISEMENT

அதே மாதிரி பழைய பில்லிங்கை கிளியரிங் செய்யுறதுக்கும் 3% கமிஷன், உங்களுக்கு வாங்கிக்கங்க.. அதையும் எனக்கு கரெக்ட்டா கொடுத்துடனும்..

கமிஷன் டீலிங்குல எங்கேயும் எனக்குன்னு கேட்காம உங்களுக்குன்னுதான் ”கேட்டுக்கிட”னும்..”ன்னு ரொம்பவே கூலா ஆர்டர் போட்டிருக்காராரு சார்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share