வைஃபை ஆன் செய்ததும், “நினைக்க நினைக்க மலைக்குதே”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. அப்படி என்ன மலைப்பான நியூஸ்?
சொல்றேன் ப்ரோ… குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி குஜராத்தா? தமிழ்நாடா?ன்னு எதிர்காலத்துல பெரும் போட்டியே வரும் போல.. போன டிஎம்கே கவர்மெண்ட்டும் இப்ப இருக்கிற டிவிகே கவர்மெண்ட்டும் இதுல ரொம்பவே சீரியசா இருக்காங்க..

இதை பத்தி நாம சீனியர் ஐஏஎஸ் ஆபீசர்ஸ்கிட்ட பேசுனப்ப, “திமுக பீரியட்ல ஓஎம்ஆர் செம்மஞ்சேரியில குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கிறதுக்கு டெபுடி சீப் மினிஸ்டர் உதயநிதி திட்டமிட்டு பூர்வாங்க வேலைகள் செஞ்சிருந்தாரு.. செம்மஞ்சேரி திருவிடந்தை ஏரியாவில 120 ஏக்கரில டென்னிஸ்- வாலிபால் மைதானங்கள், ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள், ஹாக்கி மைதானம், நீச்சல் குளம், கிரிக்கெட், ஃபுட்பால், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகள்னு விளையாட்டு தொடர்பான அத்தனையும் ஒரே இடத்துல இருக்கிற ஏற்பாடு.. அப்பவே சி.எம்.டி.ஏ டெண்டர் எல்லாம் விட்டுச்சு.. மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.. கன்டினியூ பண்ணுவோம்னு நினைச்சாங்க.. ஆனா நடக்கலை..

இப்ப ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா இந்த விஷயத்துல ரொம்ப தீவிரமா இருக்கிறார்.. ஆனால் போன திமுக பீரியட் செலக்ட் செஞ்ச இடம் வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்காரு..
கிழக்கு கடற்கரை சாலையில 500 ஏக்கர் பரப்பளவில ரூ1,000 கோடி ப்ராஜக்ட்டில் இந்த சிட்டியை அமைக்கனும்னு ப்ளான் பண்ணி இருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதை 3 வருஷத்துக்குள்ள கட்டி முடிக்கனும்னு ப்ளான் பண்ணியிருக்காங்க..
இதுக்குகாக ஆபீசர்ஸ் டீமை குஜராத்துக்கு அனுப்பினார் மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா.

குஜராத்துல மோதேரா என்ற பகுதியில் 350 ஏக்கரில சர்வதேச விளையாட்டு நகரம் உருவாகிட்டு இருக்கு.. உலகத்திலேயே மிகப் பெரிய ஸ்டேடியமான மோடி ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில இது உருவாகுது.
2030 காமன்வெல்த் கேம்ஸ், 2036 ஒலிம்பிக் கேம்ஸை இங்க நடத்துற ப்ளானோட இந்த சிட்டியை உருவாக்கிட்டு இருக்கிறாங்க.. இந்த சிட்டியைதான் நம்ம தமிழ்நாடு ஆபீசர்ஸ் டீம் போய் பார்த்துட்டு வந்து ஆதவ் அர்ஜூனாகிட்ட ரிப்போர்ட் கொடுத்துருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
