சட்டசபையில் திடீரென ‘சாமி ஆடிய’ திமுக எம்.எல்.ஏ.! சபாநாயகர் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

DMK MLA 'Trances Out

தமிழக சட்டசபையில் இருந்து வால்பாறை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சுதாகர் ‘சாமி ஆடிய’ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டசபை இன்று (செப்டம்பர் 8) காலை கூடியதும் திமுக கொறடா எ.வ.வேலு எழுந்து, முதல்வர் விஜய்யின் நேற்றை பேச்சில் சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை அறிக்கை ஆகியவற்றை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் பதிலளித்தனர். அமைச்சர்கள் பதில்களால் கொந்தளித்த திமுக எம்.எல்.ஏ.க்கள், விஜய்யின் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இதனை ஏற்க மறுத்து, சபையில் பேச அனுமதி அளிக்கிறேன் என்றார். இதனை திமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. அத்துடன் சபாநாயகர் இருக்கை முன்பாக தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர் திமுக எம்.எல்.ஏ.க்கள்.

ADVERTISEMENT

இதனால் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இருப்பினும் திமுக எம்.எல்.ஏ.க்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்து அறிவுறுத்தினார். இதன் பின்னர் சபை காவலர்களை அழைத்து திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதனால் சபையில் இருந்து வெளியேற மறுத்த திமுக எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக சபை காவலர்கள் வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது திடீரென சபாநாயகர் இருக்கை முன் நின்று கொண்டிருந்த வால்பாறை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சுதாகர், ‘சாமியாடி’ போல துள்ளினார். அவரை சூழ்ந்து நின்ற சபை காவலர்கள் அவரை அழுத்தமாக பிடித்துக் கொண்டனர்.

இதனைப் பார்த்த சபாநாயகர், “அவருக்கு உடல்நிலை சரியில்லை விடுங்கள்.. அவரை கூட்டிட்டு போங்க.. அவரை அமைதியா கூட்டிட்டுப் போங்க ” என்றார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share