மத்திய அரசின் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கூட்டிய தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக பங்கேற்காதது வருத்தம் தருவதாக மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது
தொகுதி மறுவரையறை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்.
2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
