தொகுதி மறுவரையறை.. போன வருஷம் “இதை” சொன்னது நீங்க தானே ப்ரோ? விஜய்க்கு அதிமுக கேள்வி

Published On:

| By Mathi

Delimitation Issue: AIADMK's Question to Vijay

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு, அவரது கடந்த ஆண்டு அறிக்கையை முன்வைத்து அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 5-ந் தேதி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவெகவின் நிலைப்பாடு என விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை” என்பது ஒரு மக்கள் பிரச்சினையே இல்லை. Shortage of MPs is not at all a problem being faced by an ordinary citizen. It is a democratic issue in Principle and not a Principal democratic issue. அதைவிட மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சனைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன். அவற்றை களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த அறிக்கையை ஷேர் செய்து அதிமுக ஐடி விங்-ன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ? இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?

அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?

ADVERTISEMENT

ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா? இவ்வாறு அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பி உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share