திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 8) சாமி தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமலை அம்மன் நகரில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கினார்.
அங்கிருந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
பின்னர் அங்கிருந்து கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு சென்று அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார்.
அமித்ஷா வருகையை ஒட்டி திருவண்ணாமலையில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி உதயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அருணாச்சலேஸ்வரர் கோயில், கிரிவல பாதைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமித்ஷாவின் வருகையை ஒட்டி திருவண்ணாமலையில் ட்ரோன்கள் பறக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலையில் வழிபாடு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் புதுச்சேரி செல்கிறார்.
