தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பெரு நகரங்களில் பணிபுரியும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
அந்த வகையில் ரயிலில் பயணிப்பவர்களுக்கான இருக்கை முன்பதிவு இன்று தொடங்குகிறது.
இந்திய ரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிகளின்படி நவம்பர் 6ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவர்களுக்கான முன்பதிவு இன்று செப்டம்பர் 6 காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமை பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதியும்,
நவம்பர் 8ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 8ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வார இறுதி நாட்களில் பண்டிகை வருவதால், நவம்பர் 6ம் தேதி முன்பதிவு பயணச்சீட்டுகளுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் கோவை போன்ற பகுதிகளுக்கான ரயில் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர வாய்ப்புள்ளதால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
அதுபோன்று பண்டிகை முடிந்து நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பயணம் செய்பவர்களுக்கான முன்பதிவு வரும் செப்டம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.
வழக்கமாக தீபாவளி டிக்கெட் முன்பதிவு, ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
