சொத்து குவிப்பு வழக்கு : அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!

By Kavi

|

Published on 3 Nov 2026, 5:07 PM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் உள்ளிட்ட 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். 

இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் (வழக்கு எண் Spl.C.No.3/2019) நடைபெற்று வந்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் அரசு சார்பில் 79 சாட்சிகளும், எதிர்தரப்பில் 6 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். 

அரசு தரப்பில் 312 ஆவணங்களும் எதிர்தரப்பில் 74 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை மதுரையில் உள்ள பண மோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. 

எனவே தூத்துக்குடி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் நீதிபதி சுபா தேவி இன்று உத்தரவு பிறப்பித்தார். 

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் மனைவி மகன்கள் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel