கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

By Pandeeswari Gurusamy

|

Published on 3 Nov 2026, 4:46 PM

தமிழக முதல்வர் விஜய் கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் இன்று (நவம்பர் 3) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக வந்த தமிழக முதல்வர் விஜய், கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு சென்றார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோருக்கான ரூ. 3,000 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்புவதற்காகச் சாலை மார்க்கமாக கோவை வந்த முதல்வர் விஜய், வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியிலிருந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் காவல் நியை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, தமிழக முதல்வருடன் மேற்கு மண்டலக் காவல்துறை தலைவரும் கோவை மாநகரப் பொறுப்பு ஆணையருமான ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். காவல் நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர், காவல் நிலையச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பணியிலிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வை முடித்துக் கொண்டு காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கிருந்து சென்னை திரும்ப உள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel