நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்கில் கே.எஸ்.ரவிக்குமார்

Published On:

| By uthay Padagalingam

KS Ravikumar Act in Telugu Movie

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், சூர்யா, சரத்குமார் என முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் தந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தெலுங்கில் சிரஞ்சீவியை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து ‘நட்புக்காக’ ரீமேக்கான ‘சினேகம் கோசம்’ தந்தார். நாகார்ஜுனா, ராஜசேகர் படங்களை இயக்கிய இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணாவின் ’ஜெய்சிம்ஹா’, ‘ரூலர்’ படங்களை இயக்கினார்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு திரையுலகில் கே.எஸ்.ரவிக்குமார் கால் பதிக்கப் போகிறார். இம்முறை ஒரு நடிகராக அங்கு அடியெடுத்து வைக்கிறார்.

ADVERTISEMENT

பவன் கல்யாண் நடிப்பில் வெகுவிரைவில் ‘ஹரிஹர வீர மல்லு’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனூடே, அவர் அடுத்த படமான ‘உஸ்தாத் பகத் சிங்’ குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் ‘வைரல்’ ஆகி வருகின்றன. KS Ravikumar Act in Telugu Movie

அந்த வரிசையில், இந்த படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ரீலீலா நடித்து வரும் நிலையில், இன்னொரு ஹீரோயினாக ராஷி கன்னா இணைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

‘ஹரிஹர வீர மல்லு’, ‘ஓஜி’ என பவன் கல்யாணின் இரு படங்கள் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், நீண்ட காலமாகக் காத்திருப்பில் இருந்துவரும் ‘உஸ்தாத் பகத் சிங்’கும் அந்த வரிசையில் சேர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. KS Ravikumar Act in Telugu Movie

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share