கன்னிப் பேச்சாக இருந்தாலும் கண்ணியம் தேவை: தவெக எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் குட்டு!

Published On:

| By Mathi

Dignity is essential even in a maiden speech: Speaker reprimands TVK MLA

சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “கண்ணியத்துடன்” பேச வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்தார்.

சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி தவெக எம்.எல்.ஏ. சுகுமார் பேசுகையில் எதிக்கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “ கன்னிப் பேச்சாக இருந்தாலும் கண்ணியத்துடன் உறுப்பினர் பேச வேண்டும். உறுப்பினர் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. பொதுவாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பேசுகின்ற உறுப்பினர் இந்தப் பக்கமாக இருந்தாலும் சரி, அந்தப் பக்கமாக இருந்தாலும் சரி, கண்ணியத்தோடும், சட்ட பேரவையில் என்னென்ன வார்த்தைகளை நாம் பிரயோகிக்க வேண்டுமோ அந்த வார்த்தைகளை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுத்து, வார்த்தைப் பிரயோகத்தில் மற்றவர்களைப் புண்படுத்தாமல் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இது லைவ்-ஆக உலகம் முழுவதும் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது. யார் எப்படி என்று நன்கு அறிந்துகொள்ள மக்களும் விரும்புகிறார்கள். அந்த வகையில் அனைத்து உறுப்பினர்களும் அந்த கண்ணியத்தைக் கடைப்பிடிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ADVERTISEMENT

இதேபோல திருவெறும்பூர் தொகுதியில் பட்டாக்கள் தொடர்பாக புகார்களை மற்றொரு தவெக எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, தவெக எம்.எல்.ஏ.வை நீங்க உட்காருங்க என கடுமையான தொனியில் எச்சரித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share