”தவெக மாமி அரசு”.. மாஜி சபாநாயகர் அப்பாவு விமர்சனம்!

Published On:

| By Mathi

Former Speaker Appavu strongly criticizes TVK

முதல்வர் விஜய்யின் தவெக அரசை, “தவெக மாமி அரசு” என விமர்சித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக அரசு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு ஏதுவாக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலாக அறிவித்து ஆணை வெளியிட்டார் அப்போதைய முதல்வர் கலைஞர்.

ADVERTISEMENT

அவர் வழிவந்த முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தை” ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் ஒலிப்பேழை இன்றி அனைவரும் எழுந்து நின்று பாட வேண்டும் என 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிட்டு “அதன்படி தமிழ்தாய் வாழ்த்துக்கு” உரிய மரியாதை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் தவெக மாமி ஆட்சி வந்தபின் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயர் தாங்கி நிற்கும் #நெல்லை பல்கலைக்கழக ஆளுநர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்திய போது ஒன்றிய அரசின் சுற்றறிக்கை, ஆளுநரின் ஆணை என்று கூறி தவெக மாமி அரசு பதுங்கி, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த உங்கள் இயலாமை சந்தி சிரிக்கிறது CM sir,

ADVERTISEMENT

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்நாள், ஒன்றிய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் இசைக்கப்பட்டு உள்ள நிலையில் ஒன்றிய அரசு நிகழ்ச்சி ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்று சாக்குப் போக்கு சொல்லி தமிழை அவமானப்படுத்தும் “தவெக மாமி அரசே” திருந்திக்கொள்!

“தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே” என்ற புரட்சிக் கவிஞர் #பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் ஏந்திய தமிழ் இளைஞர்கள் மாமி அரசுக்கு தக்க பாடம் கற்பிக்க தயாராகி வருகிறார்கள் CM sir.

ADVERTISEMENT

ஏற்கனவே “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலுக்கு இருந்த அதிகாரத்தை பாஜக-விடம் அடகு வைத்து விட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றும் தவெக மாமி அரசே! மசோதாவாக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமாக்க தயங்குவது ஏன் CM sir ? இவ்வாறு முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share