தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் மரியவில்சன், ”எனக்கு ஒரு மொழி என்னுடைய Christianity கத்து கொடுத்திருக்கு. அன்பு மொழி,.. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது” என பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் அமைச்சர் மரியவில்சன் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சட்டசபையில் நேற்று திமுக எம்.எல்.ஏ. திமு ராசேந்திரன் பேசும் போது, அமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மரியவில்சன், “எனக்கு ஒரு மொழி என்னுடைய Christianity கத்து கொடுத்திருக்கு. அன்பு மொழி,.. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது” என்றார். அத்துடன், “என்னை கேலி பேசுறீங்களா?” என ஆவேசப்பட்டபடியே மைக்கை தட்டிவிட்டு அமர்ந்தார்.
நிதி அமைச்சர் மரிய வில்சனின் இந்த பேச்சும் செயலும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
எக்ஸ் பக்கத்தில் குவிந்துள்ள கண்டனங்கள்:
@DrSenthil_MDRD: கிறிஸ்துவம் Vs தமிழ் என பொருள் படும் வகையில் மரிய வில்சன் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. மொழி மற்றும் மதம் அப்பாற்பட்டு சுமுக உறவுடன், சமூக நல்லிணக்கத்துடன் வாழும் தமிழ் நாட்டு மக்கள் இது போன்ற பொறுப்பற்ற பேச்சை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
@com_maruthaiyan: மரிய வில்சனின் மதத்தை குறிப்பிட்டு திமுக எம்.எல்.ஏ எதுவும் பேசாதபோது,“எனக்கு ஒரு மொழி என்னுடைய Christianity கத்து கொடுத்திருக்கு. அன்பு மொழி,.. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிள் படிச்சிருக்கேன். Born Christian.” என்கிறார். இந்த பேச்சும் ஜெபமாலையும் கிறித்தவ சமூகத்தினருக்கு சொந்த செலவில் அவர் வைக்கும் சூனியம். சங்கிகளுக்கு கொண்டாட்டம்!
@sugunadiwakar: உண்மையில் மரியவில்சனின் பேச்சு கிறிஸ்துவர்களைத்தான் அவமானப்படுத்துகிறது. தனக்கு தமிழ் உச்சரிப்பு வராததுக்கு காரணம் வளர்ந்த சூழல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவர் என்ற காரணத்தைச் சொல்கிறார். கால்டுவெல், ஜி.யு.போப், பெஸ்கி என்று வெளிநாட்டு கிறிஸ்துவர்களே தமிழை நன்கு கற்றுணர்ந்தவர்கள். மாயூரம் வேதநாயகம் முதல் நவீன இலக்கியத்தில் பிரான்சிஸ் கிருபா, பாமா, ராஜ்கௌதமன், குமாரசெல்வா, அ.மார்க்ஸ், தமிழவன், ஹெப்சிபா ஜேசுதாசன், நோயல் ஜோசப் இருதயராஜ், தமிழ்ப்பிரபா என்று படைப்பாளிகள், விமர்சகர்கள் ஏராளம் உள்ளனர். எனவே மரியவில்சனுக்கு தமிழ் வராததற்கு காரணம் மரிய வில்சனே தவிர, கிறித்துவம் அல்ல. மேலும் தான் ஒரு Born christian என்று சொல்வதன் மூலம் தான் Converted Christian-ஐ விட மேலானவர் என்று சொல்ல விரும்புகிறாரா?
@I_Magizhan_21: ஆக தமிழைப் படித்தவர்களுக்கு அன்பு, அமைதி, இரக்கம் இவைகளைப் பற்றி தெரியாது என்று மாண்பு இல்லாத மரியாதைக்கு உரியவர் அல்லாதநிதியை பற்றி எதுவும் தெரியாத அமைச்சர் மரிய வில்சன் சொல்கிறாரா?
உயிரினும் மேலான எங்கள் தமிழ் மொழியை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவர் பேசும்போது அதை கைதட்டி ஆதரித்த ஒட்டுமொத்த தரங்கெட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தாய் மொழியை அவமதிப்பது என்பது பெற்ற தாயை அவமதிப்பதற்கு சமமானது! அத்தகைய இழிவான செயல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு போக நாங்கள் ஒன்றும் எந்த ஒரு மொழி, இன உணர்வற்ற மானங்கெட்ட தற்குறி தவெக 🤡 அல்ல.
@AravindRajaOff: என் மதம் எனக்கு கற்று தந்ததை எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது – மரிய வில்சன் எவ்ளோ மோசமான வார்த்தை இது. இதெல்லாம் ஏன் எந்த தலைவரும் கண்டிக்கல? சட்டசபையில் உறுப்பினர்களை மிரட்டும் வகையில் பேசிய அமைச்சர் மரியவில்சன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாரா?
@Vignesh_twitz: கிறிஸ்துவம் அவருக்கு கற்றுக் கொடுத்த மொழியை எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாதா ? என்ன சொல்ல வருகிறார் அமைச்சர் மரிய வில்சன்?
@CheyyaruArun: Bible படிச்ச Born Christians-க்கு மட்டும்தான் அன்பு, அமைதி, இரக்கம் இருக்குமாம். தமிழ் படிச்சா இந்தப் பண்புலாம் இருக்காதாம்?
ஏன் திருக்குறள்ல அந்தக் கருத்துலாம் இல்லையா?
@sureshkalipandi: தமிழில் உச்சரிக்க தெரியவில்லை என்பதற்காக மதத்தை இழுத்த அமைச்சர் மரிய வில்சன் தமிழை பிழை இல்லாமல் பேச முடியவில்லை என்ற விமர்சனத்திற்கு, அதற்கு முறையான காரணத்தை அமைச்சர் சொல்லி தமிழை பிழை இல்லாமல் பேச முடியாததற்கு மன்னிப்பு கோரி இருக்கலாம், ஆனால் அதை விடுத்து கிறிஸ்தவம் எனக்கு அன்பு மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறது என்று பேசுவது மதரீதியாக மக்களை பிரிக்கின்ற பிரிவினைப் பேச்சாகவே இது அமைந்திருக்கிறது.
கிறிஸ்தவம் அன்பு மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறது. மற்ற மதம் அன்பை கற்றுக் கொடுக்கவில்லை என்று தானே அர்த்தம். மதத்திற்குள் ஒளிந்து அரசியல் செய்ய முயற்சித்தால் தமிழக மக்கள் அதற்கு சரியான தண்டனையை தருவார்கள். மத ரீதியான அமைச்சர்களின் பேச்சுக்கு முதல்வர் விஜய் விளக்கம் தர வேண்டும்.
@CholaPallavan: மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்; மத பெருமை பேசவா சட்ட மன்றம்? தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் மொழியை அவமானப்படுத்துவதா?
@tis_Pops: நிதியமைச்சர் மரிய வில்சன யாரும் தமிழ்ல பேசுங்க, ஆங்கிலத்துல பேசுங்கனு கட்டாயப்படுத்தல… தமிழ்நாடு சட்டமன்றத்துல தமிழையே ரொம்ப தப்பு தப்பா பேசிட்டு இருந்தா இதவிட பெரிய கிண்டல், கேலி வரத்தான் செய்யும்… ஒன்னு நான் திருத்திக்கிறேன்னு சொல்லனும் இல்ல வர கேலி கிண்டல சிரிச்சு கடந்து போயிரலாம்… அதவிட்டுட்டு பிரிட்டீஷ்காரன் மாதிரி பில்டப் பண்ணக் கூடாது… பக்குவமா எடுத்து சொல்றார், திரு.எ.வ.வேலு
ஃபேஸ்புக் பக்கத்தில்..
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி: ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுகிறாரா? அல்லது தமிழை ஆங்கிலத்தோடு கலக்கிறாரா?இருமொழிகளையும் கலந்து பேசும் போக்கிற்கு எதிராக ‘தனித்தமிழ்’ இயக்கத்தவர்கள் நூறாண்டுகளாக செயல்பட்டுள்ளனர்.
நிதியமைச்சரின் ஆங்கில கலப்பு மொழிநடையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள இயலாதென்பது அவரது இயலாமையை காட்டுகிறது. இப்படியாக ஆங்கில கலப்போடு பேசுவதை Unique -தனித்துவமானது என்கிறார். மொழி கலப்போடு பேசுவது ‘தனித்துவமானதல்ல.. அது மொழியை கொச்சைப்படுத்துவதாக ஆகும். ஓரிரு முறை எதார்த்த நிலைகளில் பேசுவது வேறு. தமிழ் மொழி தான் தமிழ்நாட்டரசின் மொழி எனும் நிலையில், அமைச்சர் பொறுப்பேற்பவர், தனது மொழி நடையை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, ஒருமொழி நடையை தனித்துவமானது என்பது நகைப்பிற்குரியது.
அவரது கலப்பு மொழியை சுட்டிக்காட்டினால், அதை கவலையுடனும், சுயவிமர்சனத்துடனும் ஏற்பது அவசியம். அவர் மக்கள் மன்றத்தில் பேசுகிறார், ஆகவே மக்களின் தாய்மொழியில் உரை நிகழ்த்தும் கடமை அவருக்குண்டு. அவரை அமைச்சராக்கிய மக்களின் மொழியை பேசவராது, இயலாதென்பது மாண்புக்குரியதல்ல.
முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஆங்கிலம், பிறமொழி கலக்காத தமிழில் பேச வேண்டும். அரசு நிர்வாகத்தில் தமிழே ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாக அமையட்டும்.
சட்டசபையில் தனித்தமிழை பேசத்தெரியாதவர்களுக்கும், பேச இயலாதவர்களுக்கும் தனியே பயிற்சி முகாமை தவெக அரசு உருவாக்கட்டும். உலகளவில் அவரவர் தேசத்தில் அவரவர் தாய்மொழியிலேயே அரசு அலுவலகங்களில் உரையாற்றுகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. அமைச்சர்கள் தொடர்ந்து இருமொழி கலப்பாக பேசுவார்களெனில் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்: மரிய வில்சன் சொல்கிற “அன்பு மொழி, இரக்க மொழி” எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் முதன் முதலில் இவர் தமிழ்ச்சமூகத்துக்கு அறியப்பட்டதே ஒரு தெரு ரவுடி போல இவர் பொதுவெளியில் ஒரு வீட்டிலுள்ளவரை மோசமாக மிரட்டி, எச்சரித்த ஒரு காணொலியின் மூலம்தான்.
பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் திருப்பதி: நிதியமைச்சர் கோபப்படக்கூடாது என்று சபாநாயகர் சொல்லுமளவுக்கு சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டசபையில் ஒரு உறுப்பினர் உங்களுக்கு தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்குமார் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்த நிலையில், கடும் கோபத்துடன், “நான் பிறப்பால் கிருஸ்துவன் எனக்கு கிருஸ்துவ மதம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறது. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தவர்களுக்கும் தெரியாது” என்றார் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன். கிறிஸ்துவத்தை பெருமைப்படுத்துகிறேன் என்று தமிழை இழிவுபடுத்துவது முறையல்ல.திருக்குறளில் எட்டாவது அதிகாரம் அன்புடமையாகும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
என்ற குறள் உள்ளிட்ட பல்வேறு குறள்களில் அன்பு குறித்து திருவள்ளுவர் கூறியிருக்கிறார். 25வது அதிகாரத்தில் அருளுடைமையில்
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
என்பது உள்ளிட்ட பல்வேறு குறள்களில் இரக்கம் குறித்தும்,
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
என்று அடக்கமுடைமை உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களில் மன அமைதி,வாழ்வியல் மற்றும் ஆன்மீக அமைதி, சமூக அமைதி குறித்தெல்லாம் திருவள்ளுவர் விளக்கமாக தமிழில் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை தான் போதிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை தான் சனாதன தர்மமும் போதிக்கிறது. அதனால் தன் மதம் மட்டும் தான் அன்பை போதிக்கிறது என்ற கருத்தை உருவாக்க யாரும் முயற்சிக்கக் கூடாது.
இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள் தன் தவறை உணர்ந்து, கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பது தான் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு!
மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர்: தமிழுக்கும் அமுதென்று பேர்கான்ஸ்டான்ஸோ ஜோசப் பெஸ்கி என்கிற இத்தாலியப் பாதிரியார் தமிழ்நாட்டுக்கு வந்து சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்று, புலமை பெற்று எழுதிய தேம்பாவணி எனும் காவியத்தைப் படித்து தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் மிஸ்டர் மரிய விலசன் என்கிற பீட்டரு (இப்படி டமில் பேசுபவர்களை பீட்டரு என்றுதான் தமிழ்கூறும் நல்லுலகம் அன்பு மொழியில் அழைக்கிறது).
தேம்பாவணிக்கு விளக்கம்:
தேம்பா+அணி : வாடாத மலர்
தேன்+பா+அணி: தேன் கலந்த பாடல்கள்
அதில் ஒரு சான்று: (உபயம் Wikipedia)
இயேசுவின் கண்கள், வாய், சொல்திறம், முகம் ஆகியவற்றின் எழிலை யோசேப்பு இறந்தோர் உலகில் உள்ளவர்களுக்கு எடுத்துரைக்கும் விதம்:
மீன் ஒக்க, பாவ இருள் விலக, மிளிர் விழி கொண்டான்;
கான் ஒக்க மறை உமிழ, கமழ் கமல வாய் கொண்டான்;
தேன் ஒக்க, துயர்க் கைப்புச் சிதைப்ப, இனிது உரை கொண்டான்;
வான் ஒக்க, கவின் காட்ட, மலர் வதன நலம் கொண்டான். (பாடல்: 3377)
(பொருள்): “அத்திரு மகன் இயேசு, பாவமாகிய இருள் விலகுமாறு, விண்மீனைப் போன்று இலங்கும் கண்களைக் கொண்டவன்; வேதத்தை மணம் பொருந்த எடுத்துக் கூறும் வண்ணம், மணம் கமழும் தாமரை மலர் போன்ற வாயைக் கொண்டவன்; துயரத்தின் கசப்பை ஒழிக்கும் வண்ணம், தேனைப் போன்று இனிதான சொல்லைக் கொண்டவன்; தன் அழகை எடுத்துக் காட்ட, வானம் போல் மலர்ந்த முகம் கொண்டவன்.”
இதைச் சொல்லும் நான் பிறப்பால் மலையாளி!
சுமார் 80 ஆண்டுளுக்கு முன் பாலக்காட்டுக் கணவாய் வழியாக வந்து தமிழ்நாட்டில் குடியேறிய “வந்தேறி”களின் வழி வந்தவன்.
பிறந்த ஊர்: கல்லக்குடி
என்னுடைய SSLC சான்றிதழ் இப்படிக் குறிப்பிடுகிறது:
ஜாதி: நாயர்
தாய்மொழி: தமிழ்
So, Honourable Minister Marie Wilson, I am a Tamil-speaking Nair who had studied in Tamill medium and went on to become the Editor of an English magazine.
மாண்புமிகு மரிய வில்சன் அவர்களே, தமிழ் பேசும் நாயராகிய நான் தமிழ் மீடியத்தில் படித்து பின்னர் ஓர் ஆங்கிலப் பத்திரிக்கையின் ஆசிரியரானவன். இன்றும் தமிழில் எழுதுவதையே அதிகம் விரும்புபவன். Where there is a will, there is a way ஐ மீன், மனமிருந்தால் மார்க்கமுண்டு.
Chandra Barathi: தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா. மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக அமைந்துள்ளன. பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே. ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், “நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது” என்று கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்றமாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்தார். சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர், தமிழை இழிவுபடுத்தி தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது. பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஜெபமாலையுடன் வந்து சிலுவை அடையாளம் செய்த அமைச்சர், தற்போது தமிழை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியிருப்பது தொடர்ச்சியான மதச்சார்பு வெளிப்பாடாகவே தெரிகிறது.
கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம். மேலும், சொத்து தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், “அன்பு மொழி” பற்றி பேசுவது இரட்டை வேடமாகவே தென்படுகிறது. சட்டப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது. நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே அந்தப் பதவிக்கு அழகு. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும
