டிஜிட்டல் திண்ணை: திமுக விஜய்க்கு எதிர்ப்பா? வெளிநடப்பா? வேலுமணி கோஷ்டிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? பரபர தகவல்

Published On:

| By Mathi

Digital Thinnai Trust Vote Vijay DMK AIADMK

வைஃபை ஆன் செய்ததும், ”நான் தன்னந்தனி ஆளு” பாட்டை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்ன ப்ரோ.. இப்ப எதுக்கு டிவிகே பிரசார பாட்டை பாடுறீங்க?

ப்ரோ.. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளைக்கு நடக்குது இல்லையா? இப்பவே தவெக கொண்டாடுற மாதிரி சிச்சுவேசன் இருக்குதே..

ADVERTISEMENT

அப்படி என்ன ப்ரோ சிச்சுவேசன்?

சிஎம் விஜய் ஆட்சிக்கு திமுக கூட்டணியில இருக்கிற சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் ஆதரவு தர்றதால 120 எம்.எல்.ஏக்கள் சப்போர்ட் இருக்கு..

இப்ப திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு பெரியகருப்பன் கேஸில கோர்ட் தடை விதிச்சுடுச்சு.. இருந்தாலும் மெஜாரிட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்லை..

ADVERTISEMENT

அங்கிட்டு பார்த்தா, அதிமுக எஸ்பி வேலுமணி கோஷ்டி 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவை ஏத்துக்குங்க.. எங்களுக்கு மந்திரி பதவி கொடுங்கன்னு கேட்கிறாங்க….

இப்போதைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எத்தனை பேரு சப்போர்ட் கிடைச்சாலும் ஓகேன்னு விஜய் முடிவு பண்ணியிருக்கிறாரு.. அதனாலதான் எஸ்பி வேலுமணி கோஷ்டியை விஜய் சந்திச்சாரு..

ADVERTISEMENT

அப்ப அதிமுகவுக்கு எத்தனை மினிஸ்டர்ஸ் ப்ரோ?

அதான் சிக்கலே.. அதிமுக எஸ்பி வேலுமணி கோஷ்டி, “30 எம்.எல்.ஏக்கள் எங்ககிட்ட இருக்காங்க.. அதனால 9 பேருக்கு அமைச்சர் பதவி கொடுங்க”ன்னு ஆரம்பிச்சது.. ஆனா அதிமுக விவகாரத்தை டீல் செய்யுற புஸ்ஸி ஆனந்த், விஷ்ணு ரெட்டி ரெண்டு பேரும் 4 அமைச்சர்தான்னு விடாப்பிடியா நிற்கிறாங்க.. இப்ப எஸ்பி வேலுமணியும் சிவி சண்முகமும் 7 அமைச்சர் பதவிக்கு ஒத்துகிட்டாங்கன்னும் சொல்லிகிட்டு இருக்காங்க … இருந்தாலும்..

என்ன ப்ரோ.. இருந்தாலும்ன்னு இழுக்கிறீங்க?

இதுல சிக்கல் இருக்குதுன்னு தவெக தரப்புல சொன்னாங்க.. இதை பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “அதிமுக அதிருப்தி கோஷ்டியில இருக்கிற எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி. விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர்னு சீனியர்கள் பலர் மேலேயும் வழக்குகள் இருக்குது.. இப்ப அவங்களை எல்லாம் கேபினட்டுல சேர்த்துகிட்டா இந்த கேஸ்களை டெல்லி தூசு தட்டி எடுக்கும்.. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளே இறங்கிடும்.. அது பெரிய குடைச்சலா மட்டுமில்ல விஜய்க்கு டேமேஜாவும் போகும்..

அதனால வழக்கு நெருக்கடி இல்லாத அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்னு ஆலோசனை செஞ்சுகிட்டு இருக்கிறோம்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

ஓஹோ.. நாளைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குதே..

ஆமாம் ப்ரோ.. மே 13-ந் தேதிக்குள்ள மெஜாரிட்டியை நிரூபிக்கனும்னு ஆளுநர் சொல்லி இருந்தாரு. நாளைக்கு அசெம்பிளியில நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குது..

ஏற்கனவே ஆதரவு தர்றதா சொன்ன சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் நிலைப்பாட்டுல இதுவரை சேஞ்ச் எதுவும் இல்லை.. அதனால விஜய்-க்கு சிக்கலும் இல்லை.. கூடுதலா அதிமுக எம்.எல்.ஏக்கள் கணிசமா சப்போர்ட் கிடைக்கப் போகுது..

நம்பிக்கை வாக்கெடுப்புல எதிர்த்து ஓட்டுப் போடுறதா எடப்பாடி கோஷ்டி சொல்லி இருக்குதே?

ஆமாம் ப்ரோ.. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்னைக்கு பிரஸ்மீட்ல, “விஜய் அரசு கொண்டு வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்”னு சொல்லி இருக்கிறாரு..

அப்ப எஸ்பி வேலுமணி கோஷ்டி, விஜய் அரசுக்கு ஆதரவா ஓட்டுப் போடுறது கொறடா உத்தரவை மீறுனதா ஆகிடும்.. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ எஸ்பி வேலுமணி கோஷ்டி எம்.எல்.ஏக்கள் பதவிகளை பறிச்சுட முடியும்..

ஆனால், இப்ப வரைக்கும் அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமின்னு கொடுத்த லெட்டரையோ எஸ்பி வேலுமணிதான் அதிமுகவோட சட்டசபை குழு தலைவருன்னு கொடுத்த லெட்டரையோ சபாநாயகர் ஏத்துக்கவும் இல்லைங்கிறதையும் கவனிக்கனும்..

இன்னைக்கு கூட எடப்பாடி பழனிசாமியை சிஎம் விஜய் சந்திக்காம எஸ்பி வேலுமணி கோஷ்டியை மட்டும்தான் சந்திச்சுட்டு வந்திருக்காருங்கிறதையும் பார்க்கனும்.. இப்படி சபாநாயகர் முடிவே சொல்லாம இருக்கிறதால அதிமுக கொறடா உத்தரவு செல்லுமா அப்படிங்கிற கேள்வியும் வருமேன்னு சொல்றாங்க ப்ரோ..

ஒரு வேளை… எஸ்பி வேலுமணி கோஷ்டியை தனி அணியா சபாநாயகர் அங்கீகரிக்க முடியுமான்னு சீனியர் வக்கீல்கள்கிட்ட அரசு ஆலோசனை நடத்துது…

அப்படி எஸ்பி வேலுமணி கோஷ்டியை தனி அணியா சபாநாயகர் அங்கீகரிக்கும் போது, “அதெல்லாம் ஏத்துக்க முடியாது”ன்னு எடப்பாடி அணி எதிர்ப்பு தெரிவிச்சா “இதுதான் சபாநாயகர் முடிவு.. நீங்க கோர்ட்டுக்கு போய் பார்த்துக்குங்கன்னு” சொல்லமான்னும் வக்கீல்கள்கிட்ட ஆலோசனை கேட்டுகிட்டு இருக்கு அரசு.

சரி ப்ரோ.. திமுக என்ன செய்ய போகுதாம்?

திமுகவுல நம்பிக்கை வாக்கெடுப்பு பத்தி சீரியசா டிஸ்கஷன் நடந்துகிட்டே இருக்குதாம்.. ஸ்டாலினுக்கு நெருக்கமானங்ககிட்ட பேசுனப்ப, “ நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குறப்ப என்ன செய்யலாம்னுதான் பேசிகிட்டு இருக்கிறோம்.. ஒரு எதிர்க்கட்சியா, நம்பிக்கை வாக்கெடுப்பில அரசுக்கு எதிர்த்து ஓட்டு போடுவோம்.. அதுதானே பார்மாலிட்டின்னு சிலர் சொல்றாங்க..

இல்லை.. நம்பிக்கை வாக்கெடுப்பிலேயே கலந்துக்காம இருந்துடலாமே?ன்னும் இன்னொரு தரப்பு கருத்து சொல்றாங்க..

அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில கலந்துக்காம வெளிநடப்பு செய்யுறதுன்னாவே விஜய்க்கு ஆதரவுன்னு ஆகிடாதா?ன்னும் கேள்வி கேட்குறாங்க.. இப்படியும் டிஸ்கஷன் நடந்துகிட்டுதான் இருக்கு.. ஆனா, ஸ்டாலின் வீட்டுக்கு விஜய் வந்தப்ப அவரோட கையை பிடிச்சுகிட்டு ஸ்டாலின் நடந்து போற போட்டோவை பார்த்து சோசியல் மீடியாவில திமுகவினரே விமர்சனங்களை முன்வைச்சுகிட்டும் இருக்காங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share