JEE, NEET.. உயர் கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சியை நிறுத்தியதா விஜய் அரசு?

Published On:

| By Mathi

Did Vijay's Govt Stop Special Coaching Classes for JEE and NEET?

சமூக நீதித்துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு, “இது முற்றிலும் தவறான தகவலாகும். இது தொடர்பாக சமூக நீதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “மாணவ – மாணவிகளுக்கு அளிக்கப்படும் IIT, JEE, NEET உள்ளிட்ட 19 வகை உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு 187 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் IITTM – நொய்டா, NIT – ஆந்திரா, NIFT – சென்னை மற்றும் பெங்களூரு, FDDI – சென்னை உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை 357 மாணவ – மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெறுவதோடு, அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்” என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share