விஜய் முதல்வராவதை தடுக்க முயற்சித்தேனா? எனக்கு என்ன பொறாமை? ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி விளக்கம்!-வீடியோ

Published On:

| By Mathi

Rajinikanth Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) முதல்வராவதைத் தடுக்க தாம் முயற்சித்ததாக வெளியான செய்திகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று மே 17-ந் தேதி செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது: நான் 2016-ல் அரசியலுக்கு வரலைன்னு சொன்ன பிறகு, நான் ஏர்போர்ட்டுக்கு போகும்போது யூசுவலா அங்க இருக்கிறவங்க, அந்த போர்டிங் கார்டு வாங்குறதுக்கு இருப்பாங்க, அப்ப ‘மீடியா யாராவது இருப்பாங்களா?’ அப்படின்னு கேட்பது வழக்கம். அதே இதுலதான், பெங்களூரு போகும் போது மீடியா யாராவது இருப்பாங்களான்னு கேட்டேன்.. ‘மீடியா யாரும் இல்லை’ன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லி நான் போயிட்டு இருக்கும்போது, திடீர்னு ஒருத்தர் ஒரு மீடியா ஆள் மாதிரி தெரியலை எனக்கு, ஒரு சின்ன போன் வச்சுக்கிட்டு, “விஜய் ஒரு முதலமைச்சராகப் போறாரு” அப்படின்னு சொன்னாரு. நான் என்ன… சடன் ஷாக், அதாவது மீடியா மாதிரியே தெரியல எனக்கு, போன் வச்சுக்கிட்டு. அப்படியே பார்த்து சிரிச்சுட்டு நான் போயிட்டேன்.

ADVERTISEMENT

அதற்கு வந்து, “வாழ்த்துகள் சொல்லல” அப்படின்னு சொல்லி அதற்கு ஒரு விமர்சனம். இன்னொன்று வந்து, “விஜய் மேல எனக்கு பொறாமை” அப்படின்னு.

அரசியல்ல நான் இல்லைன்னு சொல்லி விலகியாச்சு. அரசியல்ல நான் இல்லாதபோது, அவர் மேல எனக்கு ஏன் பொறாமை? ஒருவேளை கமல்ஹாசன் ஏதாவது முதலமைச்சர் ஆகியிருந்தா எனக்குப் பொறாமை வந்திருக்குமோ என்னமோ தெரியாது! அப்போ கூட வந்திருக்காது. ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’.

ADVERTISEMENT

சோ, இன்னொன்று வந்து எனக்கும் விஜய்க்கும் ஜெனரேஷன் கேப் (Generation Gap). கிட்டக்கிட்ட 25 இயர்ஸ் டிஃபரன்ஸ் (25 Years Difference). நான் முதலேயே சொல்லிருக்கேன். நான் வந்து விஜய வந்து, நான் சொந்தமாக இத கம்பேர் பண்ணிக்கிட்டா அது எனக்கு நல்லது இல்லை, கெட்ட பேரு. விஜய் என்னை பத்தி கம்பேர் பண்ணிக்கிட்டா அவருக்கு நல்லது இல்லை. சின்ன வயசுல இருந்து அவரைப் பார்த்துட்டு இருக்கேன். அவர் சிஎம் (CM) ஆனதற்கு எனக்கு என்ன பொறாமை?

அதுவும் இன்னும் இவ்வளவு சின்ன வயசுல, 52 வயசுல, எம்ஜிஆர், என்டிஆர் சாதனை பண்றதை விட, அதைவிட ஜாஸ்தி. கம்ப்ளீட்டா சென்டர் பிஜேபி, எவ்வளவு பெரிய பவர்ஃபுல் சென்டர். இங்க ரெண்டு பெரிய கட்சிகளையும் எதிர்த்து தனி ஆளா வந்து ஜெயிச்சிருக்காங்க. அதுவும் நம்ம சினிமா இண்டஸ்ட்ரில இருந்து. எனக்கு அது பொறாமை இல்லை, ஒரு ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம். அப்ரிசியேஷன் (Appreciation), சூப்பர்!’.

ADVERTISEMENT

சோ, அந்த பொறாமையும் இல்லை. விஜய் அவர்களுக்கு வந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு ஜனங்க மத்தியில. டெஃபனிட்டா அந்த எதிர்பார்ப்பெல்லாம் அவரு சந்திச்சு மக்களுக்கு நல்லது செய்யணும், செய்வாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவருக்கு என் பெரிய வாழ்த்துகள். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share