திமுக- அதிமுக கூட்டணிக்கு முயற்சியா? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajini

ஸ்டாலின் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் ஒரு நண்பன் என்ற முறையில், நட்பின் அடிப்படையில் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன் என நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி இரண்டு மூன்று விமர்சனங்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் உலகிலும் பரவலாகப் பரவி வருகின்றன. அதற்கு நான் பதில் கொடுக்கவில்லை என்று சொன்னால், அது உண்மை என்று ஆகிவிடும். முதலில், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் ஸ்டாலின் சாரை சந்தித்தது குறித்து சில விமர்சனங்கள் வந்தன. ஸ்டாலின் சார் எனது 40 ஆண்டுகால நண்பர். எங்களுடைய நட்பு கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் தோல்வியும் வெற்றியும் சகஜம். இருந்தாலும், ஸ்டாலின் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் ஒரு நண்பன் என்ற முறையில், நட்பின் அடிப்படையில் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

ADVERTISEMENT

ஆனால், “நான் விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது என்பதால் அதைத் தடுப்பதற்காக அங்கே போகிறார்” என்றும், “வேறு இரண்டு பெரிய கட்சிகளைச் சேர்க்க வேண்டும்” என்றும் பேசுகிறார்கள் என விமர்சனங்கள் வெளியில் வருகின்றன. அந்தச் சூழ்நிலையில் நான் அதையெல்லாம் பேச முடியுமா? அப்படிப் பேசும் அளவுக்கு ஒரு தரங்கெட்ட ஆள் ரஜினிகாந்த் இல்லை. அதை நான் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

அப்போது திமுகவையும் அதிமுகவையும் நீங்கள் பேச்சுவார்த்தை செய்து, இணைந்து எடப்பாடியை முதலமைச்சராக்குறதுக்கான முயற்சிகள் நீங்கள் ஏதும் செய்தீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ரஜினிகாந்த்: சொல்லியாச்சுல்ல! என சிரித்தவாறே கூறினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share