முதல் 2 மணி நேரம் .. விறுவிறு வாக்குப் பதிவு.. மதுராந்தகத்தை முந்திய தாராபுரம்!

Published On:

| By Mathi

Dharapuram-Madurankatam Voter Turn Out

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி தாராபுரத்தில் 17.55 விழுக்காடும், மதுராந்தகத்தில் 15.99 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் காலை 9 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தாராபுரம் தொகுதியில் 17.55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுராந்தகம் தொகுதியில் 15.99 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

இதன் மூலம் முதல் இரண்டு மணி நேர வாக்குப்பதிவில் மதுராந்தகத்தைவிட தாராபுரத்தில் 1.56 விழுக்காடு அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 19.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share