திருச்சி மாவட்டம் துறையூரில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவிக்க வந்த நபரை தமிழக சட்டசபை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
துறையூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைக்க ஒருவர் வந்துள்ளார். அப்போது அவருக்கும் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த நபரை ரவிசங்கர் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் தாக்குதல் நடத்தியவர் துணை சபாநாயகர் ரவி சங்கர்தான் என்பது தெளிவாக தெரியவில்லை.









