டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது சரமாரி தாக்குதல்- குஜராத்தை சேர்ந்தவர் கைது!

Published On:

| By Mathi

Delhi CM Attack Gujarat Man Arrest

டெல்லி முதல்வர் ரேகா குப்தா (Rekha Gupta) மீது இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார். இதில் முதல்வர் ரேகா குப்தா படுகாயமடைந்தார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரான ரேகா குப்தா, இன்று காலையில் தமது இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது, பொதுமக்கள் கூட்டத்துடன் நின்றிருந்த நபர் திடீரென முதல்வர் ரேகா குப்தாவின் தலை முடியை பிடித்து இழுத்ததாகவும் இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் அப்போது அந்த நபர் சரமாரியாக தாக்கினார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதில் படுகாயமடைந்த முதல்வர் ரேகா குப்தா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ரேகா குப்தாவின் முகம், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாக்குதலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தி பிடிபட்ட நபர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என தெரிய வந்துள்ளது. அவரது போட்டோவை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share