தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆளும் தவெக அரசின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் (செப்டம்பர் 8) நிறைவடைந்தது.
17-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் மே 11 முதல் மே 13 வரையும், பின்னர் ஜூன் 18 முதல் ஜூன் 23 வரையும் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது.

சட்டசபை அலுவல்கள் தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அளித்த புள்ளி விவரங்கள்:
- பேரவை கூடிய நாட்கள் 28
- மொத்த அவை நேரம் 170 மணி 6 நிமிடங்கள்
- நாள் ஒன்றுக்குச் சராசரி 6 மணி 4 நிமிடங்கள்
- ஆளுநர் உரை விவாதம் 3 நாட்கள்; 20 உறுப்பினர்கள்; 7 மணி 1 நிமிடம்
- பட்ஜெட் பொது விவாதம் 4 நாட்கள்; 32 உறுப்பினர்கள்; 14 மணி 15 நிமிடங்கள்
- மானியக் கோரிக்கை விவாதம் 15 நாட்கள்; 165 உறுப்பினர்கள்; 63 மணி 53 நிமிடங்கள்
- வெட்டுத் தீர்மானங்கள் வரப்பெற்றவை 4,066; அனுமதிக்கப்பட்டவை 3,874; அவையில் முன்மொழியப்பட்டவை 1,674
- வினாக்கள் வரப்பெற்றவை 14,399
- வினாக்களை அளித்த உறுப்பினர்கள் 170
- அனுமதிக்கப்பட்ட வினாக்கள் 12,733
- நட்சத்திரக் குறியிட்டவை 3,455; நட்சத்திரக் குறியிடாதவை 9,272; குறுகிய கால வினாக்கள் 6
- அவையில் விடையளிக்கப்பட்ட நட்சத்திர வினாக்கள் 23
- துணை வினாக்கள் 242
- சிறப்பு கவன ஈர்ப்புகள் 45; அதில் பேசியவர்கள் — 106; நேரம் 6 மணி 47 நிமிடங்கள்
- தகவல் கோரலாக அனுமதிக்கப்பட்டவை 59
- கவன ஈர்ப்புகள் வரப்பெற்றவை 929; கவன ஈர்ப்பாக அனுமதிக்கப்பட்டவை 153
- அரசு தனித் தீர்மானங்கள்- 8
- விதி 110 அறிக்கைகள் – 18
- 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு 17
- சட்டமுறை விதிகள்-ஆணைகள் 75
- அறிக்கைகள், அறிவிக்கைகள், ஏனைய தாள்கள் 125
- பேரவையை நேரில் பார்த்தவர்கள் 32,055; ஆண்கள் 27,642; பெண்கள் 4,413
- அச்சிடப்பட்ட பக்கங்கள் 8,926
- அமைச்சர்கள்/உறுப்பினர்களுக்கு நடவடிக்கைக் குறிப்புகள் 1,453
- தலைமைச் செயலகத் துறைகளுக்கு அனுப்பப்பட்ட நடவடிக்கைக் குறிப்புகள் 134.
அதிக நேரம் பேசிய திமுக
ஆளுநர் உரை மீதான விவாதம் மொத்தம் 7 மணி 1 நிமிடம்
திமுக 4 பேர் (2 மணி 36 நிமிடங்கள்)
இதர கட்சிகள் 9 பேர் (2 மணி 2 நிமிடங்கள்)
அதிமுக 3 பேர் (1 மணி 27 நிமிடங்கள்)
ஆளுங்கட்சி 4 பேர் (56 நிமிடங்கள்)
திருத்தப்பட்ட பட்ஜெட் விவாதம் மொத்தம் 14 மணி 15 நிமிடங்கள்
திமுக 9 பேர் (5 மணி 10 நிமிடங்கள்)
இதர கட்சிகள் 10 பேர் (3 மணி 49 நிமிடங்கள்)
அதிமுக 5 பேர் (3 மணி)
ஆளுங்கட்சி 8 பேர் (2 மணி 16 நிமிடங்கள்)
மானியக் கோரிக்கை விவாதம்- மொத்தம் 63 மணி 53 நிமிடங்கள்
திமுக 38 பேர் (23 மணி 35 நிமிடங்கள்)
இதர கட்சிகள் 39 பேர் (13 மணி 52 நிமிடங்கள்)
ஆளுங்கட்சி 51 பேர் (13 மணி 28 நிமிடங்கள்)
அதிமுக 37 பேர் (12 மணி 58 நிமிடங்கள்)
ஆளுநர் உரை, திருத்தப்பட்ட பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் மீதான மூன்று முக்கிய விவாதங்களிலும் திமுக உறுப்பினர்களே அதிக நேரம் பேசியுள்ளனர். மூன்றையும் சேர்த்து திமுக உறுப்பினர்கள் 31 மணி 21 நிமிடங்கள் பேசியுள்ளனர். இதே விவாதங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 16 மணி 40 நிமிடங்களும், அதிமுக உறுப்பினர்கள் 17 மணி 25 நிமிடங்களும், இதர கட்சியினர் 19 மணி 43 நிமிடங்களும் பேசியுள்ளனர்.
