கேரளாவில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்african swine flu in kerala
- கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் பரவியதால், மடக்கத்தாரா பஞ்சாயத்தில் உள்ள தனியார் பண்ணையில் 310 பன்றிகள் கொல்லப்பட்டன.african swine flu in kerala
- ஒரு கிலோமீட்டர் சுற்றளவு நோயால் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் 10 கிமீ கண்காணிப்பு பகுதி என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அப்பகுதியில் பன்றி இறைச்சி கொண்டு செல்வது மற்றும் பன்றிகளின் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.
- மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு பரவும் அபாயம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
- வெளியந்தரையை சேர்ந்த, குட்டலப்புழா பாபு என்பவருக்கு சொந்தமான பன்றிகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பன்றிகளை கொன்று புதைக்க மாவட்ட கால்நடை பராமரிப்பு அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட பண்ணையில் இருந்து, வேறு பண்ணைகளுக்கு பன்றிகள் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் (ASF) மற்ற வகை காய்ச்சலிலிருந்து வேறுபட்டது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றியின் உடல் திரவங்களை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் ஒரு பன்றியிலிருந்து மற்றொரு பன்றிக்கு உடனடியாகப் பரவுகிறது. இது பன்றிகளுக்கு மட்டுமே வரும் நோய் என்பதால், மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-வர்ஷா செல்வச்சந்திரன்.
அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்